மும்பை, ஆக. 16-
முன் எப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62 ஆக சரிந்தது. இது இந்திய பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
ரூபாயின் மதிப்பு சரிந்ததால் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன.
மும்பை பங்குச்சந்தையில் காலை முதலே சரிவில் இருந்த சென்செக்ஸ், மதிய நிலவரப்படி 701 புள்ளிகள் சரிந்து 18665 என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 215 புள்ளிகள் சரிந்து, 5524 புள்ளிகளாக இருந்தது.
இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment