click me

Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts
Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts

Tuesday, September 4, 2012

புதுடெல்லி : இனி ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது கொஞ்சம் உஷாராக இருங்கள்...

புதுடெல்லி : இனி ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது கொஞ்சம் உஷாராக இருங்கள்... பணத்தை கவனமில்லாமல் விட்டு சென்றால், அது திரும்ப உள்ளே போகாது. அப்படியே இருக்கும். ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் ஏடிஎம் இயந்திரத்தில் இந்த மாற்றத்தை செய்து வருகின்றன. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை பயன்படுத்திய பிறகு, சில நொடிகளில் பணம் வெளியே வரும். அதை 5 அல்லது 10 நொடிகளில்(இயந்திரத்தை பொறுத்து) எடுக்காவிட்டால், தானாகவே பணம் மீண்டும் உள்ளே போய் விடும். 
   
பணம் வெளியே வரும் போது சிலருக்கு செல்போன் ஒலிக்கும். உடனே அதை எடுத்து அவர் பேசும் போது, சில நொடிகள் லேட் ஆகி விடும். இதுபோன்ற கவனச் சிதறலால் குறிப்பிட்ட நொடியில் பணத்தை எடுக்கா விட்டாலும், சில நோட்டுகளை தவற விட்டாலும் அந்த பணம் மீண்டும் இயந்திரத்தின் உள்ளே போய், அதற்கான ஒரு டிரேயில் சேகரிக்கப்படும். அந்த தொகை மீண்டும் வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். தற்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை உள்ளே இழுக்கும் இந்த வசதியை நீக்கி விடுமாறு அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 

இதனால், இனி வெளியே வந்த பணம் இயந்திரத்தின் வாய் பகுதியிலேயே இருக்கும். நாம் மறந்து விட்டு சென்றாலோ, கவனக்குறைவாக சில நோட்டுகளை விட்டு சென்றாலோ, அதை வேறு யாராவது எடுத்து கொள்ள நேரிடும். இது குறித்த விவரங்களை ஹெச்டிஎப்சி வங்கி தனது ஏடிஎம் மையங்களில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.
எனவே, நாம் இனி ஏடிஎம்களில் இரட்டிப்பு கவனத்துடன் இருக்க வேண்டும். கவனக் குறைவால் பணத்தை விட்டால் அடுத்து வருபவரின் பர்ஸ் நிறைந்து விடும்.

கழிவறையை விட கைபேசிகளில் அதிகளவு பக்டீரியாக்கள்: ஆய்வில் தகவல்

சமீபகாலமாக கைபேசிகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
கைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உட்பட பல கொடிய வியாதிகள் வரும் என்று கூறப்பட்டாலும் யாரும் அதை கேட்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் கைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் கழிவறையில் இருக்கும் பக்டீரியாவை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம், கைபேசியை யாரும் சுத்தம் செய்வதில்லை. மேலும் தாங்கள் பயன்படுத்திய போனை மற்றவர்களுக்கு பேச கொடுக்கும் போது அவர்களிடமிருந்தும் பக்டீரியாக்கள் தொற்றிக் கொள்கின்றன.
கைபேசியை வாய் மற்றும் காதுடன் ஒட்டி வைத்து பேசுவதால் இந்த பக்டீரியாக்கள் எளிதில் தொற்றிக் கொள்கிறது.
பின்னர் இந்த கைபேசியை யார் யார் எல்லாம் பயன்படுத்துகின்றார்களோ அவர்களுக்கும் பக்டீரியா தொற்றிக் கொள்கிறது.
இதே போன்று ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த பக்டீரியா அதிகம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Friday, August 31, 2012

இன்று முழு நிலவு நாள் 'நீல நிலவை'க் காணத் தவறாதீர்கள்!


டெல்லி: இன்று முழு நிலவு நாள். இன்றைய தினம் இரவில் வானத்தைப் பார்த்தால் ஒரு ஆச்சரியம் உங்களுக்குக் காத்திருக்கும். அதாவது இன்றைய இரவு தோன்றும் நிலாவுக்கு ப்ளூ மூன் என்று பெயர்.
இப்படி 'நீல நிலவாக' நமது சந்திரன் காட்சி தருவது என்பது அரிதான ஒரு விஷயம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட நீல நிலவைக் காண முடியும்.
வழக்கமாக வருடத்திற்கு 12 முறை பவுர்ணமி வருவது வழக்கம். சில சமயம் 13 பவுர்ணமி வரும். அப்படிப்பட்ட சமயத்தில், வரும் நிலவுக்குத்தான் நீல நிலவு என்று பெயர்.
அப்படியானால் நிலா நீல நிறமாக காட்சி தருமா என்று கேட்கலாம். அப்படி இல்லை. வழக்கம் போலத்தான் இருக்கும். இருப்பினும் சில சமயங்களில் வளி மண்டலத்தின் பரவிக் கிடக்கும் தூசு மண்டலம் காரணமாக நிலவின் நிறம் லேசான நீல நிறத்தில் இருப்பது போலத் தோன்றும். மற்றபடி வழக்கம் போலத்தான் இந்த முழு நிலவும் வெண்மையாக இருக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் முழு நிலவுக்கு வானியல் நிபுணர்கள் ஒரு பெயர் வைத்துள்ளனர். அதன்படி 12 முழு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. அதேசமயம், 13வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் எந்த மாதத்தில் 2 முறை முழு நிலவு வருகிறதோ அப்போது இந்த ப்ளூ மூன் வரும்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதிதான் ஒரு முழு நிலவு வந்தது. இன்று 2வது முழு நிலவு என்பதால் இதை ப்ளூ மூன் என்கிறோம்.
இன்றைக்கு விட்டால், அடுத்து 2015ம் ஆண்டு ஜூலை மாதம்தான் ப்ளூ மூன் வருகிறதாம். எனவே இன்றைய இரவை மறக்காமல் விசேஷமாக்குங்கள்....



Tuesday, August 28, 2012

டிஎன்ஏ மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்


குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும்குற்றம் நடந்துள்ள இடமொன்றிலிருந்து கிடைக்கும் டிஎன்ஏ மரபணுப் பொருட்களைக் கொண்டு சந்தேகநபர் ஒருவரின் தலைமயிர் மற்றும் கண்களின் நிறங்களை கண்டறிய கூடிய தடயவியல் பகுப்பாய்வு முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிடைக்கின்ற டிஎன்ஏ தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது போகின்ற பட்சத்தில், குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறங்களை கண்டறிய முடிவதன்மூலம் சந்தேகநபர்கள் பற்றிய முக்கிய தரவுகள் கிடைக்கும் என்று இந்த சோதனை முறையைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் குழுவினர் நம்புகின்றனர்.உதாரணத்துக்கு, ஒரு குற்றச்செயல் தொடர்பில் பலர் மீது சந்தேகம் ஏற்படுகின்றபோது, அவர்களில் பிரதான சந்தேகநபர்களை குறிப்பாக ஊகித்து வரையறை செய்வதற்கு இந்த சோதனை முறை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, August 27, 2012

உலகளவில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நகரங்களாக மெல்போர்ன்(97.5) முதலிடத்தையும்

உலகளவில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நகரங்களாக கனடாவின் வான்கூவர், டொரொண்டோ, கேல்கரி போன்ற நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் சிறந்த நகரங்களைத் தெரிவு செய்வதற்காக சுமார் 140 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் சுகாதாரம், நிலைத்தன்மை, பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற காரணிகளைக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
இந்த ஆய்வில் கனடாவில் வான்கூவர் 100க்கு 97.3 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது. டொரொண்டோ நான்காவது இடத்தையும்(97.2) கேல்கரியும், அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டும் (96.6) ஐந்தாவது இடத்தையும் பெற்றன.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்(97.5) முதலிடத்தையும், ஆஸ்திரியாவின் வியன்னா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த ஆய்வில் மக்கள் வாழவும், மக்கள் விரும்பி வந்து பார்க்கவும் விரும்பிய நகரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல நகரங்களில் மதிப்பெண் குறைந்ததற்கு போர், கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவையும் காரணங்களாயின. லிபியாவின் உள்நாட்டுப் போர், கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவை அந்த நாடுகளில் உள்ள நகரங்களின் மதிப்பெண்களை குறைத்தன.
இந்த ஆய்வில் கடைசி இடத்தைப் பிடித்தது பங்களாதேஷின் தாக்கா(38.7) நகரமாகும். இத்தகவலை The Economist பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பெர்முடா பகுதியில் பறந்த பறவைகள் மாயம்: நீடிக்கும் மர்மம்

அட்லாண்டிக் கடலின் மர்ம பகுதிக்குள் செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாகி வருகின்றன. தற்போது பறவைகளும் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டிரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது.
இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிகளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது அப்பகுதியில் பறக்கும் பறவைகளும் காணாமல் போகின்றன. இதற்கு இங்கு அளவுக்கு அதிகமான பேய் மழை, சூரிய சக்தியின் தாக்கம் மற்றும் ஈர்ப்பு விசையும் காரணம் என கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் இருந்து புறா போட்டியாளர்கள் திர்ஸ்க், வெதர்பி, கான்செட் ஆகிய பகுதிகளில் இருந்து 232 புறாக்களை பறக்க விட்டனர். ஆனால் அவற்றில் 13 புறாக்கள் மட்டுமே திரும்பி வந்தன. மற்றவை மாயமாகி விட்டன.

Thursday, August 9, 2012

இந்தியாவின் ஜனாதிபதிகள்

இதுவரையில் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள் நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் எந்த எந்த தேதிகளில் பதவி வகுத்தார்கள் என தெரியாது. தெரிந்துகொள்ளுங்கள்