click me

Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Saturday, March 30, 2013

போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என தென்கொரியா கூறியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே, எல்லைப் பகுதியில் வடகொரியா படைகளை குவிக்க தொடங்கியது. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகளும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா நேற்று அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறியுள்ள தென்கொரியா, இதுபோன்ற தொடர் அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
undefined
undefined
undefined

Tuesday, January 15, 2013

பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங்


பாகிஸ்தானுடனான உறவுகள் சுமுகமாக இருக்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் இருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இருநாட்டு உறவுகளும் மோசமடைந்துவருகின்றன.இந்தியப் படைவீரர் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கடந்தவாரம் அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்கு பாகிஸ்தான் படையினரே பொறுப்பு என்று இந்தியா குற்றஞ்சாட்டுகின்றது.
ஆனால் பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
தமது படைவீரர்கள் கொல்லப்பட்ட செயலை காட்டுமிராண்டித் தனமானது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்துள்ளார்.
அண்மைய இருதரப்பு மோதல்களில் பாகிஸ்தான் படைவீரர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள்.
இந்த சம்பவங்களால் இருநாட்டு உறவுகளிலும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாக். பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு


பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்ஐ கைதுசெய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமரையும் அவருடன் சேர்த்து இன்னும் 15 பேரையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.2010-ம் ஆண்டில் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தபோது, அரச செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை பர்வேஸ் அஷ்ரஃப் மறுக்கின்றார்.
இதேவேளை, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிரதமரின் உடனடி பதவி விலக்கலுக்கு வழியமைக்காது என்றே அவதானிகள் பெரும்பாலும் கருதுகின்றனர்.
அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதகுருவான தாஹிருல் காத்ரி ஆயிரக்கணக்கான மக்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

Sunday, January 6, 2013

சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம்

undefined3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்துவிட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது பயணங்களை மேற்கொள்ளாமல் தரித்து நிற்கின்றன.
சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது.

Thursday, January 3, 2013

அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.(வீடியோ இணைப்பு )

போர்க் கப்பல்களை தாக்கும் அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் கப்பற்படை பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. இதில் பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் கடைசி நாளில் 200 கிலோமீற்றர் இலக்கை தாக்கும் கேதர் என்ற அதிநவீன ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றியில் முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் தன்னுடைய இராணுவ வலிமையை காட்டுவதற்காகவே பரிசோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
undefined

Wednesday, January 2, 2013

ஐவரி கோஸ்ட் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 60 பேர் பலி

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடந்தது. இசை நிகழ்ச்சிகளுடனும், வான வேடிக்கைகளுடனும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட்.
இந்நாட்டின் பிரதான நகரமான அபித்ஜானில் உள்ள பெலிக்ஸ் ஹூப்பட் போய்னி மைதானத்தில் நேற்றிரவு புத்தாண்டு விழா நடைபெற்றது. வண்ண வண்ண வாணவேடிக்கையைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.

Friday, December 28, 2012

மலேசியாவில் கடும் வெள்ளம் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு

undefinedமலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகி உள்ளனர், பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
மலேசியாவில் நான்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்வதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இம்மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளதுடன், 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
பகாங் மாகாணத்தில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Sunday, December 23, 2012

ஈரான் தலைவர் பெயரில் பேஸ்புக் கணக்கு: மர்ம நபருக்கு வலைவீச்சு

undefinedஈரானின் தலைவர் அயதுல்லா அலி ஹாமினியின் பெயரில் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இணைய தளங்களை உபயோகிப்பது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் பல சமூக வலைதளங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தலைவர் ஹாமினியின் பெயரில் கணக்கொன்றை யார் தொடங்கியிருப்பார் என்ற மர்மம் எழுந்துள்ளது.
இதில் அயதுல்லா ஹாமினியின் படங்கள், அவரைப்பற்றிய தகவல்கள், பேச்சுகள் என பகிரப்பட்டுள்ளது.

Saturday, December 22, 2012

கனடாவை தாக்கிய பனிப்புயல் ரஷ்யா, உக்ரைனில் கடும் உறைபனி

undefinedகனடாவை தாக்கிய பனிப்புயலால் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.
கனடாவை தாக்கிய பனிப்புயலால், தரையில் 20 செ.மீ உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது.
ஒண்டோரியாவின் கிழக்கிலும், கியூபெக்கின் மேற்கிலும் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.
இதனால் ஹைட்ரோ கியூபெக், ஹைட்ரோ ஒன் மற்றும் ஹைட்ரோ ஒட்டாவா மின்சார நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மின்வெட்டினால் பல சிரமங்களுக்கு உள்ளாயினர்.

Friday, December 21, 2012

மாயன் இனத்தவர்கள் கொண்டாட்டம்:உலக அழிவுக்கு விடை(படங்கள்)

உலக அழிவு நாள் என்று உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாயன் காலண்டர் தினத்துக்கு மாயா இனத்து மக்கள் பாரம்பரிய கொண்டாட்டங்களுடன் விடைகொடுத்தனர்.
மெக்சிகோவின் யுகடான் பகுதியில் வாழும் மாயா இனத்தவர்கள் நேற்று காலை முதல் பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்காக தம்மை தயார்படுத்தி வந்தனர்.
மாயன் கலண்டரின் இறுதி நாளுக்கு விடைகொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புதிய யுகம் ஆரம்பமாகுவதாகக் குறிப்பிட்டு பாரம்பரிய வாழ்த்துப் பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.
அவர்களுடைய கணிப்பின்படி இன்றுடன் 400 வருடகால யுகம் நிறைவுக்கு வருகிறது.

உலகம் அழியும் பீதி: கண்ணாடி இழையால் ஆன கூண்டு

மாயன் காலண்டர் டிசம்பர் 21ம் திகதியுடன் நிறைவடைவதால் இன்றுடன் உலகம் அழிந்து விடுமோ என்ற பீதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
undefinedஅது வெறும் கற்பனைதான் உலகம் அழியாது என்று விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இருந்தும் சிலர் அதை நம்ப மறுக்கின்றனர்.
மாயன் இனத்தவர் விண்ணியல் சாஸ்திரத்தில் வல்லுனர்கள். அவர்கள் வகுத்த நியதிப்படி இதுவரை பல விடயங்கள் நடந்துள்ளது. அதுபோன்று இதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர்.
இதற்கிடையே உலகம் அழிய வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் உறுதியாக சொன்னாலும் அதுகுறித்த கண்காணிப்பு பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

Wednesday, December 19, 2012

உலக மக்களில் 80% பேர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய ஆய்வு


மதங்களில் நம்பிக்கை குறையவில்லைஉலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் சுமார் 600 கோடி பேர் மதத்தை சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள், கருத்துக்கணிப்பு மற்றும் பிறப்பு இறப்பு பதிவேடுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

Monday, December 17, 2012

சீனாவின் புதிய சாதனை தெளடாட்டிஸ் குறுங்கோள், கண்டுபிடிப்பு

விண்வெளியில் குறுங்கோள் ஒன்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது சீனாவின் சாங்கி-2 விண்வெளி ஓடம்.
சூரியனை சுற்று வரும் குறுங்கோள்களை புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்வதற்காக சாங்கி-2 என்ற விண்வெளி ஓடத்தை சீனா அனுப்பியது.
தற்போது பூமியிலிருந்து 70 லட்சம் கிலோமீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருந்த "தெளடாட்டிஸ்" என்ற குறுங்கோளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

Sunday, December 16, 2012

வருகிற 21ஆம் திகதியுடன் உலகம் அழியப் போகிறதா

வருகிற 21ஆம் திகதியுடன் உலகம் அழியப் போகிறது என ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்த சிலரை சீன பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாயன் காலண்டர் படி, வருகிற 21ஆம் திகதி உலகம் அழியப் போகிறது என நம்பும் சீனர்கள் ஒண்றிணைந்து பல ஊர்களில் கூட்டம் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இவர்கள் சீனாவின் மத்திய பகுதிகளிலும், மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் இவ்வாறு கூட்டம் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி, இவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Friday, December 7, 2012

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்


ஜப்பானில் கிழக்கு கடற்கரையின் ஹொன்சு தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 5.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 7.3ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பக்கூடும் என கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானில் பெரும் அளவு உயிர்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்படும் அளவிற்கு பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 6, 2012

சுவீடனின் பல பகுதிகள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது (படங்கள் )

கடும் பனிப்புயல் காரணமாக சுவீடனின் பல பகுதிகள் ௦பாதிக்கப்பட்டுள்ளதால், நோபல் பரிசு பெற வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
சுவீடனில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று முன்தினம் முதல் பனிப்புயல் வீசியதால் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
இதனால் தலைநகர் ஸ்டாக்ஹோம் உள்பட பல நகரங்கள் பனியில் மூடின. முக்கியமாக விமான நிலையம் ஸ்தம்பித்ததால், ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
எனவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வர இயலாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் நிர்வாகிகள் கூறுகையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப இங்கு பல்வேறு கருத்தரங்கு, மாநாட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், பனிப்பொழிவு காரணமாக தாமதமாகிறது என்றனர்.

பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 475


பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 475 ஆக அதிகரிப்புபிலிப்பின்ஸில் ஏற்பட்டுள்ள போஃபா புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது.
போஃபா புயலினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அரசு பிற நாடுகளின் உதவியை நாடி வருகிறது. இந்த வருடத்தின் மிக மோசமான புயலாக கருதப்படும் போஃபா புயல் கடந்த செவ்வாய்க்கிழமை மின்டானாவ் தீவை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஏற்பட்டது.
இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் சேற்றில் சிக்கியும், மரங்கள் விழுந்தும், வீடுகள் இடிந்தும் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயலின் போது காணாமல் போன 377 பேரை தேடி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடற்பரப்பில் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது சீனா.

சமீப காலமாக சீனாவின் வளர்ச்சி பல்வேறு நாடுகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. மற்ற நாடுகளை சார்ந்து இருந்த சீன இப்பொழுது மற்ற நாடுகள் தங்களை சார்ந்து இருக்கும்படி வளர்ச்சியில் முன்னேறியுள்ளது. இந்த வளச்சியை பல நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்ற வேளையில் பல அதிரடி முடிவுகளை எடுத்து அவ்வப்போது உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. இம்முறை கடற்பரப்பில் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது சீனா.

சீனாவின் தென்பகுதியிலுள்ள ஹைனான் தீவுவைச் சுற்றியுள்ள சீனாவுக்குச் சொந்தமான கடல்பரப்பில் அத்துமீறி நுழையும் கப்பல்கள் எனத் தாங்கள் கருதும் கப்பல்களுக்குள் சீன பொலிசார் நுழைய இந்த புதிய விதிமுறைகள் அதிகாரம் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, December 2, 2012

பாலஸ்தீனர்களுக்கு ஐநா சபையில் non-member observer state,


பாலஸ்தீனர்கள் கொண்டாட்டம்ஐநா சபையில் non-member observer state,அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள்.
மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காசா நகரிலும் மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, வாகனங்களின் ஹோர்ன்களை ஒலியெழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் அந்தஸ்தை இன்னுமொருபடி மேலே உயர்த்துகின்ற தீர்மானத்துக்கு ஐநாவின் பொதுச்சபை சாதகமாக வாக்களித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தை உறுப்பினர் அல்லாத பார்வையாளர் என்று அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேஸில் உள்ளிட்ட 138 நாடுகள் வாக்களித்தன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கலாக 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்காமல் ஒதுங்கிக்கொண்டன.

Saturday, December 1, 2012

மக்களின் மனதை கொள்ளை கொண்ட நகரம் பாரிஸ்

உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமாக பாரிஸ் திகழ்வது தற்போது தெரியவந்துள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பெருவாரியான மக்கள் பாரிஸ் நகரத்தை Like செய்துள்ளனர்.
அதாவது 2,035,433 பேர் தங்களுக்கு பிடித்த நகர் பாரிஸ் என தெரிவித்துள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த பாரிஸ் நகர வர்த்தகர்கள் பேஸ்புக் மூலமாகவே தங்கள் பொருட்களை விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்தாண்டு மட்டும் பாரிசுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 29 மில்லியன் ஆகும்.