click me

Showing posts with label வணிக செய்திகள். Show all posts
Showing posts with label வணிக செய்திகள். Show all posts

Friday, August 16, 2013

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது

மும்பை, ஆக. 16-

முன் எப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62 ஆக சரிந்தது. இது இந்திய பங்குச்சந்தைகளில் கடும்  தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

ரூபாயின் மதிப்பு சரிந்ததால் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன.

மும்பை பங்குச்சந்தையில் காலை முதலே சரிவில் இருந்த சென்செக்ஸ், மதிய நிலவரப்படி 701 புள்ளிகள் சரிந்து 18665 என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 215 புள்ளிகள் சரிந்து, 5524 புள்ளிகளாக இருந்தது.

இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Saturday, December 1, 2012

OECD நிறுவனம் எச்சரிக்கை:கனடாவின் பொருளாதாரம் திடீரென சரிவடையலாம்

கனடாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ள போதிலும், சில பின்னடைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக OECD என்ற சர்வதேச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

Sunday, November 18, 2012

அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள்


தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.
 
ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
 
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
 
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை.

Thursday, October 25, 2012

டெக்கன் சார்ஜர்ஸை வாங்கியுள்ளது சன் டிவி


இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் ஹைதராபாத் அணியான டெக்கன் சார்ஜர்ஸை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த அணியை ஆண்டொன்றுக்கு ரூபாய் 85 கோடிகள் என்ற ஒரு தொகைக்கு சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
அவ்வணியின் உரிமையாளர்களாக இருந்துவந்த டி சி ஹெச் எல் இந்தியாவின் கரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்குசெலுத்த வேண்டிய தொகைகளை அது செலுத்தத் தவறியதால் டெக்கன் சார்ஜர் அணிக்கென அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை கடந்த செப்டம்பரில் பிசிசிஐ ரத்து செய்தது.
டெக்கன் சார்ஜர்ஸ் அணியின் உரிமைக்காக பிசிசிஐ நடத்திய ஏலத்தில் மிக அதிகமான தொகை கொடுத்து தற்போது அவ்வணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
டெக்கன் சார்ஜர்ஸை சன் டிவி வாங்கியிருப்பதன் காரணமாக ஐதராபாத் அணிக்கு பதிலாக வேறு அணி ஒன்றை உருவாக்க கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நிலை பிசிசிஐக்கு ஏற்படவில்லை.

Monday, October 22, 2012

கிங்பிஷர் உரிமத்தை ரத்து செய்தது விமான இயக்குனரகம்

பொது விமான போக்குவரத்து இயக்குனரகம் (Directorate General of Civil Aviation) கிங்பிஷர் விமான நிறுவனத்தின் உரிமத்தை இன்று ரத்து செய்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லைய்யா நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விமான நிறுவனத்தின் நிலையை சீராக்க மேலும் கால அவகாசம் கோர விஜய் மல்லைய்யா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதற்கு முன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பொது விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
கிங் பிஷர் விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட ரூ. 7524 கோடி கடன் மற்றும் நிதி நெருக்கடியே இந்த அவல நிலைக்கு காரணமாகும்.
இரண்டாம் இணைப்பு:
இதன்படி விமான போக்குவரத்து இயக்குனரகம் கிங்பிஷருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தக்க பதிலளிக்கதாக காரணத்தினால் கிங்பிஷரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Wednesday, October 17, 2012

தகவல் தொழில்நுட்பத் துறையில்ஆசியாவின் 11 பெரிய ஐ.டி. கம்பெனிகளில் இந்தியாவின் 3 நிறுவனங்கள்


ஆசியாவின் 11 பெரிய ஐ.டி. கம்பெனிகளில் இந்தியாவின் 3 நிறுவனங்கள்தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவில்தான் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், ஆசிய நாடுகளும் இதற்கு சளைத்ததல்ல என்பது இப்போது தெரியவந்துள்ளது.
 
போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய சமீபத்திய ஆய்வு இதனை நிரூபித்துள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நிறுவனங்களை போர்ப்ஸ் நிறுவனம் கணக்கெடுத்து டாப்-50 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.

Sunday, September 9, 2012

ப்ரீ-பெய்டு செல்போன்களுக்கு ஐ.எஸ்.டி. வசதி ரத்து: ஓரிரு நாள்களில் அறிவிப்பு


சென்னை, செப். 9: ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஐ.எஸ்.டி. வசதி ரத்து செய்யப்படும் என்று தொலைதொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ப்ரீ-பெய்டு செல்போன் இணைப்புகள் பெறும் போது, ஐ.எஸ்.டி. எனப்படும் சர்வதேச அழைப்பு வசதியும் சேர்த்தே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் போஸ்டு-பெய்டு இணைப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்படுவதில்லை. இந்த வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் கூடுதல் முன்வைப்புத் தொகை செலுத்தியே இந்த வசதியை பெறமுடியும்.
 இப்போது ப்ரீ-பெய்டு செல்போன் இணைப்புகளுக்கும் ஐ.எஸ்.டி. வசதியை விண்ணப்பித்து பெற வேண்டும் என்ற புதிய விதியை செயல்படுத்த தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) முடிவு செய்துள்ளது என்று தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியது: "ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால், பல மடங்கு பணம் கிடைக்கும் என்று சில மோசடி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை குழப்புகின்றன. இதனை நம்பி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் இது போன்ற மோசடி எஸ்.எம்.எஸ்.-களுக்கு பதிலளித்தாலோ, அந்த எண்ணுக்கு போன் செய்தாலோ அதிகப்படியான தொகை போன் பேலன்ஸில் இருந்து எடுக்கப்பட்டு விடுகிறது.

ஒரே மாதத்தில் 13 விழுக்காடு வாடிக்கையாளர்களை இழந்த ரிலையன்ஸ்


டெல்லி: இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.20 விழுக்காடு சரிவை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணம் ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதுதானாம்
ஜூன் மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.06 கோடியாக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் இது 91.35 கோடியாக குறைந்து போனது. இவ்வளவு இணைப்புகள் கொடுக்கப்பட்டாலும் தொடர் பயன்பாட்டில் இருப்பது என்னவோ 76 விழுக்காடு மட்டும்தான்!
இந்தியாதான் செல்போன் பயன்பாட்டு சந்தையில் 2-வது இடம். இதில் 95 விழுக்காட்டினர் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள்தான்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பார்தி ஏர்டெல் நிறுவனம்தான் வாடிக்கையாளர் மற்றும் வருவாய் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது ஜூலை மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் 15 லட்சம் பேர். மொத்தம் 18.8 கோடி இணைப்புகளை ஏர்டெல் வழங்கியிருக்கிறது.

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம் லைனர் விமானம் புதுடெல்லி வந்தது

மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா 6 வருடங்களுக்கு முன்பு வாங்க ஒப்பந்தம் செய்த Boeing 787 Dreamliner விமானம் ஒருவழியாக நேற்று டெல்லி வந்தடைந்துள்ளது.
அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள Boieng's Charleston Factory யிலிருந்து 15 மணிநேர பயணத்திற்கு பின்னர் இவ்விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.
அப்போது தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பூஜை நிகழ்வுகளில் ஏர் இந்திய சிஎம்டி ரோஹித் நந்தன் மற்றும் சிவில், விமான துறையின் மூத்த அதிகாரிகள், ஏர் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைதியான கேபின்களையும், அழகிய உள்கட்டமைப்பையும் இவ்விமானம் கொண்டிருப்பதாக விமானி கேப்டன் ஏ.எஸ்.சோமன் தெரிவித்துள்ளார்.
சுமார் 256 பயணிகள் பயணம் செல்ல கூடிய வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர்கள் நிற்காமல் பயணிக்கும் வல்லமையையும் இவ்விமானம் கொண்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களில் இதே போன்று போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் இரண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதுடன், அடுத்த வருடம் மார்ச் மாதம் மேலும் 8 விமானங்கள் வழங்கப்படவுள்ளன.
சேவைகள் விபரம்: முதற்கட்டமாக டெல்லி - துபாய், டெல்லி - கொல்கத்தா, டெல்லி - பெங்களூர் மற்றும் டெல்லி - அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு இந்த போயிங் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
பின்னர் மெல்போர்ன், சிட்னி, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இயக்கப்படவுள்ளன.
ஏற்கனவே ட்ரீம்லைனர் விமானங்கள், ஜப்பான், எத்தியோப்பியா, சிலி, ஆகிய நாடுகளின் தேசிய விமான சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

உலகப் பொருளாதாரம் மாபெரும் புயலை சந்திக்க உள்ளது

உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் புயலை சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியின் கோமோ ஏரியின் அருகே உள்ள செர்னோபியோ நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூடி விவாதிப்பது வழக்கம்.
Ambrosetti Forum என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களும், சர்வதேச நிதி விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிபுணர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது.
இதில் பேசிய பெரும்பாலான சர்வதேச நிபுணர்களும், உலகம் ஒரு மாபெரும் பொருளாதாரப் புயலை சந்திக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்
ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார தேக்கம் தொடரப் போகிறது, அமெரிக்க பொருளாதாரத்தை அந் நாட்டு அரசியல் போட்டி கீழே தள்ளிவிடப் போகிறது, இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துவிட்டது, இத்தோடு ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் நிலவும் ஆபத்தான சூழல்.. இவை அனைத்தும் சேர்ந்து உலகை ஒரு புரட்டு புரட்டி போடப் போகின்றன என்றனர் இந்த மாநாட்டில் பேசிய பல நிபுணர்களும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்து வரும் கடன் சுமையும் அந் நாடுகளின் அரசியல் நிலவரமும் உலகை வாட்டும் முக்கியமான கவலைக்குரிய விஷயங்கள் என்று கூறும் நிபுணர்கள், இதனால் யூரோ நாணயத்தின் மதிப்பு அதிவேகமாக சரிந்து வருவதையும் சுட்டிக் காட்டினர்.
இந் நிலையில் உலகின் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் OECD(Organisation for Economic Co-operation and Development) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிய ஆரம்பித்துவிட்டது.
அடுத்த சில காலத்துக்கு உலகின் டாப் 7 பணக்கார நாடுகளின் வளர்ச்சி விகிதம் வெறும் 0.3 சதவீதமாகத் தான் இருக்கும்(கிட்டத்தட்ட பூஜ்யம்!). இதனால் சர்வதேச அளவில் முதலீடுகளும் வர்த்தகமும் ஸ்தம்பிக்கும். இதன் எதிரொலியாக வேலைவாய்ப்புகளும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

Saturday, September 8, 2012

வணிக செய்திகள்,


மதர் டயரி' பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்தது.


புது தில்லி, செப். 8: "மதர் டயரி' பால் விலை
லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்தது. இந்த விலையேற்றம் இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கொழுப்புச் சத்துள்ள பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ. 39-க்கும், கொழுப்பு நீக்கிய பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ. 30-க்கும் விற்கப்படும்.
டோக்கன் பால் லிட்டருக்கு ரூ. 28, இருமடங்கு கொழுப்பு நீக்கப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 26, ஆடை நீக்கிய பால் லிட்டருக்கு ரூ. 22-க்கும் விற்கப்படும்.
இது குறித்து, "மதர் டயரி' பால் பண்ணை மேலாண்மை இயக்குநர் எஸ். நாகராஜன் கூறியது:
ஓராண்டாக பால் விலையை ஏற்றாமல் கட்டுப்படுத்தி வந்தோம். இப்போது அவசியம் ஏற்பட்டதால் பால் விலை நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பால் கொள்முதல், மின்சாரம், டீசல், பதப்படுத்தும் செலவினம் உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

திபாளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை

சென்னை, செப்.,8: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது கடைகள் மூலம் கைத்தறியினால் செய்யப்பட்ட ஆடைகளை விற்பனை செய்து வருகின்றது.


இந்த ஆண்டு எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்களுடன் பட்டு, பருத்தி புடவைகள், வேஷ்டிகள், போர்வைகள், துண்டு, கம்பளம் மற்றும் இதர பொருட்களை தேவையான அளவு இருப்புக்கு ஏற்பாடு செய்து உள்ளது. எதிர்வரும் செப்., 15ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் துவக்க உள்ளது.

30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி அனைத்து கைத்தறி துணிகளுக்கும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடன் வசதியுடன் இந்தச் சலுகையையும் பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது: ஒரு கிராம் ரூ. 3022


தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது: ஒரு கிராம் ரூ. 3022சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் உண்டாகிறது. சமீப காலமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தபடி உள்ளது. பெண் குழந்தைகளை வைத்து இருப்பவர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக இந்த விலை உயர்வு இருக்கிறது.
 
தற்போது பண்டிகை மற்றும் திருமண சீசன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
 
நேற்று முன்தினம் சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது. எனவே தங்கம் விலை நேற்று ரூ. 24 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. பவுனுக்கு ரூ. 256 குறைந்ததால், நேற்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23,648 ஆக விற்பனை ஆனது.

Friday, September 7, 2012

ரெனால்ட் இந்தியா சேடன் ஸ்கேலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.


முன்னணி கார் தயாரிப்பாளரான ரெனால்ட் இந்தியா இன்று புதிய ரக காரான சேடன் ஸ்கேலாவை அறிமுகப்படுத்தி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் இயங்கக்கூடிய திறன் கொண்ட இந்த புதிய காரின் விலை ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.57 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 பெட்ரோல்-டீசல் இரண்டிலும் இயங்கும் புதிய கார்: ரெனால்ட் நிறுவனம் அறிமுகம்Renault Scala Launched
நடப்பாண்டில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் கார்கள் வரை விற்பனை செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மேலும் 2013-ம் ஆண்டு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

Thursday, September 6, 2012

அமெரிக்காவின் கடன் சுமை 16 லட்சம் கோடி டொலரை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பால் ரயன், லோவாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், கடன் சுமை அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
இது ஜனாதிபதி ஒபாமா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டது. இந்த கடன் சுமை வேலை வாய்ப்பு பிரச்னையை உருவாக்கி விட்டுள்ளது. மேலும் நமது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு எதிர்காலம் குறித்த பயத்தை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவை வழிநடந்த எங்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு வாக்களித்தால் இந்த சூழ்நிலை மாறும். செலவுகளை குறைத்தும், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தருவோம் என்றார் பால் ரயன்

Saturday, August 25, 2012

சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.5,500 கோடி அபராதம்

சியோல், ஆக., 25 : காப்புரிமையை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.5,500 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சாம்சங் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 21, 2012

காய்கள்,பழங்கள், இறைச்சி விலை தொடர்ந்து அதிகரிப்பு: உற்பத்தித்துறையை விஞ்சப் போகும் விவசாயத்துறை


Resurgent Agricultural Sector Have Larger Share டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறை மற்றும் நிதிச் சேவைகள் துறையை தூக்கி சாப்பிட உள்ளது விவசாயத்துறை.
இந்தியாவில் 80 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலிலேயே ஈடுபட்டு வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் பங்கு மூன்றாவது இடத்திலேயே உள்ளது. முதலிடத்தை உற்பத்தித்துறையும் இரண்டாவது இடத்தை நிதிச் சேவைகள் துறை எனப்படும் financial services தான் பிடித்துள்ளன.
இந்த நிலைமை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாறப் போகிறது.
விவசாயப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதையடுத்து, அடுத்த இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் முதலிடத்தை விவசாயத்துறை பிடிக்கவுள்ளது.