
பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலும் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதத்தில் கனடாவின் பொருளாதாரம் 15 சதவிகிதம் வளர்ச்சி பெறும். இது 2013ஆம் ஆண்டில் 1.8 சதவிகிதமாகவும், 2014ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதமாகவும் மாறலாம் என்றும் OECDயும், கனடா மத்திய வங்கியும் கருதுகின்றன.
இருப்பினும் OECD அமைப்பு, சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் கனடாவின் வளர்ச்சி விகிதம் 34 நாடுகளை விட கூடுதலாகவே உள்ளதாக தெரிவித்தது.
இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின்பு உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் சரிவு நிலை தோன்றும் என்றும் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment