
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் விற்பனை செய்கின்றனர். உயர் ரக மீன் வகைகள், இறால், நண்டு உள்ளிட்டவைகள் பெரும்பாலும் அன்னங்கோவிலில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் எப்போதும் கனரக வாகனங்கள் வந்து செல்வதும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரங்கிப்பேட்டை கடலில் நேற்று முன்தினம் லேசாக காற்று வீசியது. இதனால் குறைந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக காற்று பலமாக வீசியதால் பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக அன்னங்கோவில் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் நடமாட்டம் இல்லாததால் நேற்று வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதி முழுவதும் வெறிச்சோடியது.
thanks:mypno
No comments:
Post a Comment