click me

Thursday, December 6, 2012

புதுச்சேரி முதலமைச்சர் வீடு முற்றுகை


புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று முதலமைச்சர் ரங்கசாமி வீட்டின் எதிரே உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் அடுத்த மாதம் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் கவுன்சில் உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரி தேர்தல் ஆணையம் தனி ஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தைப் பறித்துவிட்டது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதென்றும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment