click me

Sunday, December 2, 2012

ரிக்கி பாண்டிங் ஒய்வு பெற்றார்


ரிக்கி பாண்டிங்ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெர்த் டெஸ்ட் போட்டியே அவர் கடைசியாக பங்கேற்கும் போட்டியாக இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டூல்கருக்கு அடுத்து அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான 37 வயதான பாண்டிங் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மோசமாக விளையாடி வருகிறார்.

அதே நேரம் ஒய்வு பெறுவது என்ற முடிவை தானே எடுத்ததாகவும், தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் இம்முடிவை எடுக்கவில்லை என்றும் பாண்டிங் தெரிவித்தார்.
இவர் 137 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,366 ரன்களை எடுத்துள்ளார். 375 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 13,704 ரன்களை எடுத்துள்ளார்.
இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

No comments:

Post a Comment