click me

Saturday, December 1, 2012

தென்சீன கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்தது சீனா

தென்சீன கடல் பகுதியில் தனது பாதுகாப்பு கெடுபிடிகளை சீனா அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தனது எல்லை போலிஸ் அதிகாரிகளை சமீபத்தில் இடம்மாற்றியுள்ள சீனா, மேலும் இவ்வதிகாரிகள் இக்கடற்பகுதியில் செல்லும் கப்பல்களை கைப்பற்றி பரிசோதனைகள் செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து சீன வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் கூறுகையில், தென் சீனக்கடலின் முக்கியத்துவம் கருதியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது ஒருபோதும் சர்வதேச கப்பல்கள் சுதந்திரமாக இக்கடற்பகுதியில் பயணிப்பதை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற நாடுகளுடனான தீவுகள் பிரச்னை நட்புறவு தொடர்பானது, பேச்சுவார்த்தையால் தீர்க்ககூடியது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment