click me

Saturday, December 29, 2012

ரத்தன் டாட்டா ஓய்வு பெறுகிறார்


இந்தியாவின் தொழில்துறைத் தலைவர்களில் மிகவும் அறியப்பட்டவரான ரத்தன் டாட்டா வெள்ளிக்கிழமையோடு பணி ஓய்வு பெறுகிறார்.
ரத்தன் டாட்டாஅவருக்கு எழுபத்தைந்து வயது ஆகிறது. டாட்டா என தனது குடும்பப் பெயரில் அமைந்த ஏராளமான தொழில் நிறுவனங்களின் குழுமத்துக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன் இவர் தலைமை ஏற்றிருந்தார்.
இவர் டாட்டா நிறுவனங்களை இந்த அளவுக்கு வளர்ப்பார் என்று அப்போது பலர் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால் இந்தியாவில் தாராளச் சந்தை சீர்திருத்தங்கள் வந்த நிலையில், அவருடைய தலைமையின் கீழ் டாட்டா நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியும் இலாபமும் கண்டது.

உலகத்திலேயே மிகவும் விலை மலிவான காரை உற்பத்தி செய்தது, பல்வேறு நாடுகளுக்கும் சென்று தொழில் நிறுவனங்களை வாங்கியது போன்றவற்றை ரத்தன் டாட்டா தனது தலைமையில் நிறைவேற்றினார்.
ரத்தன் டாட்டாவுக்கு அடுத்தபடியாக அவருடைய உறவுக்காரர் ஒருவர்தான் தலைமைப் பொறுப்புக்கு வருகிறார்.
சைரஸ் மிஸ்திரி இனி டாட்டா குழுமத்துக்கு தலைவராகச் செயல்படுவார்.
அந்த நிறுவனத்தின் நூற்றைம்பது வருட சரித்திரத்தில் டாட்டா என்ற குடும்பப் பெயர் இல்லாத ஒருவர் குழுமத்துக்கு தலைமை ஏற்பதென்பது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment