
இந்த மாநாட்டின் கருப்பொருள் இணையமேலாண்மை என்பதாக இருந்தாலும் இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.
ஐநா மன்றத்தின் போர்வையில், உலக நாடுகளின் அரசாங்கங்கள், இணையத்தின் தற்போதைய சுதந்திரத்தன்மையை பறித்து, அதை அரசுகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இந்த மாநாடு வழிவகுக்கும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகம் வெளியிடுகின்றன; குற்றம் சாட்டுகின்றன.
ஆனால் ஐநா அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இணையத்தின் இன்றைய சுதந்திரத்தை எந்த விதத்திலும் குறைப்பதோ, அல்லது கட்டுப்படுத்துவதோ ஐநா மன்றத்தின் இந்த மாநாட்டின் நோக்கமல்ல என்று ஐநா மன்ற அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இணையதொழில்நுட்பம் தற்போது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சில தனியார் பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும் நிலைமையை மாற்றி, அதை உலகு தழுவிய அளவில் ஒழுங்குபடுத்துவது மட்டுமே தங்களின் நோக்கம் என்றும் ஐநா மன்றம் தெள்வுபடுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment