புதுடெல்லி, டிச.22-
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் டெல்லி வாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும், இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கும் வகையில் 4 அம்ச பாதுகாப்பு திட்டங்களை டெல்லி அரசு இன்று அறிவித்தது. இரவு வேளைகளில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. குறிப்பிட்ட பாதையை விட்டு பொது வாகனங்கள் விலகிச்செல்லாதபடி கண்காணிக்கும் வகையில் அனைத்து பொது வாகனங்களிலும் ஜி.ஆர்.பி.எஸ். கருவிகளை பொருத்துவது.
பொது வாகனங்களில் பணிபுரியும். அனைவரும் அடையாள அட்டைகள் அணிவதை கட்டாயப்படுத்துவது. கேளிக்கை அரங்கங்கள், அலுவலகங்களில் இருந்து பின்னிரவு நேரங்களில் பெண்கள் வீடு திரும்பும் வழித்தடங்களில், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் போலீசாரை ரோந்து சுற்றி வரச்செய்வது போன்ற 4 அம்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.

No comments:
Post a Comment