click me

Wednesday, December 19, 2012

உலக மக்களில் 80% பேர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய ஆய்வு


மதங்களில் நம்பிக்கை குறையவில்லைஉலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் சுமார் 600 கோடி பேர் மதத்தை சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள், கருத்துக்கணிப்பு மற்றும் பிறப்பு இறப்பு பதிவேடுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது சுமார் 230 கோடிப் பேர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
இஸ்லாத்தை பின்பற்றுவோர் 160 கோடிப் பேர் ஆவர்.
இந்துக்களின் எண்ணிக்கை 100 கோடியாக உள்ளது.
புத்த மதத்தை பின்பற்றுவோர் 50 கோடியாகவும், பழங்குடி- நாட்டுப்புற மரபுகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40 கோடியாகவும் உள்ளது.
யூதர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது.

No comments:

Post a Comment