
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கனமழையும் பெய்கிறது.
தென் மாவட்டங்களின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பரவலாக பெய்கிறது. இந்த மழை நாளையும் நீடிக்கும். தரைக்காற்றும் அவ்வப்போது பலமாக வீசும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை மைய அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment