click me

Showing posts with label சினி செய்திகள். Show all posts
Showing posts with label சினி செய்திகள். Show all posts

Sunday, October 28, 2012

தமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு: பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்


விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை சிறுவன் ஆஜித் தட்டிச்சென்றுள்ளான். வெற்றி பெற்ற சிறுவனுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
Vijay Tv Super Singer Junior 3 Grand Final சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வெல்வதற்காக ஒர் ஆண்டுக்கும் மேலாக தினந்தோறும் தங்களின் இனிய குரலால் பாடி பல்லாயிரக்காணவர்களை வசீகரித்த குழந்தைகள் காத்திருந்தது அந்த தருணத்திற்காகத்தான்.
இறுதிப்போட்டியில் சிறப்பாகப் பாடி எப்படியாவது பட்டத்தை வென்றுவிடவேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனவும், லட்சியமும் இருந்தது. அதற்கான நாளும் வந்தது.
நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சுகன்யா, பிரகதி, கவுதம், ஆஜீத், யாழினி ஆகிய 5 போட்டியாளர்களும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் பாடி முடித்த உடன் பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை எட்டியது.

Thursday, October 25, 2012

நகைச்சுவைக் கலைஞர் ஜஸ்பால் பட்டி விபத்தில் பலி


ஜஸ்பால் பட்டிஇந்தியாவின் மிகப் பிரபலமான நகைச்சுவைக் கலைஞர்களில் ஒருவரான ஜஸ்பால் பட்டி பஞ்சாபின் ஜலந்தர் மாநிலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 57.
பவர் கட் என்ற தனது புதிய படம் பற்றிய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வியாழனன்று மோகா நகரிலிருந்து ஜலந்தர் சென்ற பட்டியின் கார் மரமொன்றில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
1980களிலும் 90களிலும் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஜஸ்பால் பட்டி. ஃப்ளாப் ஷோ, உல்டா புல்டா போன்ற வெற்றிகர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவர் இவர்.
ஹிந்தி மற்றும் பஞ்சாபி படங்கள் பலவற்றிலும் இவர் தோன்றியுள்ளார்.
காரை ஓட்டிச்சென்ற ஜஸ்பாலின் மகன் ஜஸ்ராஜும், படத்தின் நாயகி சுரிளி கௌதமும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

Sunday, October 21, 2012

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மரணம்


பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மரணம்மூத்த பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மும்பையில் இன்று மரணம் அடைந்தார். 80 வயதான யாஷ் சோப்ரா டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் யாஷ் சோப்ரா இன்று திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
 
யாஷ் சோப்ரா தயாரிப்பில் இதுவரை 21 படங்கள் வெளிவந்துள்ளன. யாஷ் தயாரிப்பில், ஷாருக்கான், கேத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் தற்போது தயாராகி வரும் ‘ஜப் ஹை ஜான்’ படம் தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 18, 2012

பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு


திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வீடு.இசை,திரைப்படங்கள்.பாடல்கள்.நடிகர்கள்.வருடம்.தொகுப்புகள் என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளளார்கள்.இதில் இசையை கிளிக் செய்தால் உங்களுக்கு இசையமைப்பாளர்களின் பெயர்கள் வரும்.அவர்கள் இசையமைத்த படங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை தெரியவரும் தேவையான இசைஅமைப்பாளர் பெயரை கிளிக செய்து பாடலை தேர்வு செய்யலாம்.திரைப்படங்களின் பெயரை கிளிக் செய்தால் உங்களுக்கு அகர வரிசையில் படங்கள் தெரிய வரும்.தேவையான படங்களை தேர்வு செய்யலாம்.
பாடகர்கள் வரிசையில் அவர்கள் பாடிய மொத்த பாடல்களையும் தொகுத்துள்ளார்கள். தொகுப்புகளில் இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். ராகங்கள் நமக்கு தெரியும். இதில் இளையராஜாவின் பாடல்களை ராகங்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள். 
பாடல்களை கேட்பதற்கு இதிலேயே ப்ளேயர்கள் கொடுத்துள்ளார். 

Saturday, September 1, 2012

நடிகர் கவுண்டமணியின் தாயார் மரணம்

உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87), நேற்று காலமானார்.
இவர், தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். குறிப்பாக அவருடைய காலில் காயம் ஏற்பட்டது.
அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார்.
அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.

Wednesday, August 29, 2012

எம்.எஸ்.விக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா! 'திரையிசைச் சக்கரவர்த்தி''...


சென்னை: சென்னையில் இன்று மாலை நடந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரையிசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
 jaya gives new title msv நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் வழங்கப்பட்ட பட்டம் மெல்லிசை மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். இன்றும் கூட இதயங்களில் அவர்களது பாடல்கள் ஒலித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் உள்ளன.

Sunday, August 26, 2012

actor A.K. Hangal dead

MUMBAI - Avtar Kishan Hangal, one of Bollywood's best known character actors, died on Sunday, media reports said.
Photo