| மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்தார். |
| சமீப நாள்களாக மத்திய அரசுக்கு எதிராக முலாயம் சிங் கடுமையான கருத்துகளைக் கூறி வந்ததையடுத்து அவர் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், எனினும் மத்திய அரசு தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் முலாயம் சிங், மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 முதல் 9 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும்? என்று கேட்டார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பாஜகவின் நரேந்திர மோடி முதல்வராக உள்ள குஜராத்துடன் ஒப்பிட்டு முலாயம் சிங் பேசினார். |
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts
Saturday, March 30, 2013
மூன்றாவது அணியைச் சேர்ந்தவர்தான் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார்.:முலாயம் சிங்.
Saturday, December 29, 2012
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி,சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.மாணவியின் மரணம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.ரத்தன் டாட்டா ஓய்வு பெறுகிறார்
இந்தியாவின் தொழில்துறைத் தலைவர்களில் மிகவும் அறியப்பட்டவரான ரத்தன் டாட்டா வெள்ளிக்கிழமையோடு பணி ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு எழுபத்தைந்து வயது ஆகிறது. டாட்டா என தனது குடும்பப் பெயரில் அமைந்த ஏராளமான தொழில் நிறுவனங்களின் குழுமத்துக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன் இவர் தலைமை ஏற்றிருந்தார்.
இவர் டாட்டா நிறுவனங்களை இந்த அளவுக்கு வளர்ப்பார் என்று அப்போது பலர் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால் இந்தியாவில் தாராளச் சந்தை சீர்திருத்தங்கள் வந்த நிலையில், அவருடைய தலைமையின் கீழ் டாட்டா நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியும் இலாபமும் கண்டது.
Saturday, December 22, 2012
டெல்லி அரசு உறுதி பெண்கள் பாதுகாப்புக்கு 4 அம்ச பாதுகாப்பு திட்டங்கள்
புதுடெல்லி, டிச.22-
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் டெல்லி வாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும், இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கும் வகையில் 4 அம்ச பாதுகாப்பு திட்டங்களை டெல்லி அரசு இன்று அறிவித்தது. இரவு வேளைகளில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. குறிப்பிட்ட பாதையை விட்டு பொது வாகனங்கள் விலகிச்செல்லாதபடி கண்காணிக்கும் வகையில் அனைத்து பொது வாகனங்களிலும் ஜி.ஆர்.பி.எஸ். கருவிகளை பொருத்துவது.
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் டெல்லி வாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும், இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கும் வகையில் 4 அம்ச பாதுகாப்பு திட்டங்களை டெல்லி அரசு இன்று அறிவித்தது. இரவு வேளைகளில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. குறிப்பிட்ட பாதையை விட்டு பொது வாகனங்கள் விலகிச்செல்லாதபடி கண்காணிக்கும் வகையில் அனைத்து பொது வாகனங்களிலும் ஜி.ஆர்.பி.எஸ். கருவிகளை பொருத்துவது.
ஜனாதிபதி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்
ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிவழங்கக் கோரி, இன்று காலை முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகள் ரைசினா குன்று பகுதியில் ஜனாதிபதி மாளிகையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை திறந்துக் கொண்டு, உள்ளே நுழைய முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைந்தோடச் செய்தனர். அதிரடிப்படையினர் வாகனங்களின் மூலம் தண்ணீரை பாய்ச்சியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சிதறி ஓட வைத்தனர்.
மத்திய அரசு முடிவு பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை
குரூரமான பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்ச்ர சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.மாலை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விரைவான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் போன், வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக முதல்வர் குஜராத் செல்கிறார்
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி வரும் 26-ம் தேதி மீண்டும் பதவி ஏற்கிறார்.
குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கும் நரேந்திர மோதிக்கு அம்மாநில ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
புதிய அமைச்சரவையுடன் பதவி ஏற்க வசதியாக, மோதி இன்று தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். 26-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
Friday, December 21, 2012
மோடி ஒரு மாயை:- முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ
தேர்தலின் போது கருத்து தெரிவிப்பது நல்லதல்ல என்பதால் இப்போது கூறுகிறேன், ''குஜராத் ஒளிர்கிறது என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா வருகிறார் நரேந்திர மோடி என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில்,இந்திய ஊடக குழுமத் தலைவரும்,முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ, "மோடி பற்றி கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், என் கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிபலித்துவிடக்கூடாதது என்பதால் தவிர்த்து வந்தேன். ஆனால் குஜராத் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் இப்போது என் கருத்தை சொல்லலாம் என்று கருதுகிறேன்.
Thursday, December 6, 2012
இந்தியாவில் சில்லறை வர்த்தக அந்நிய முதலீடு: வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி
இந்தியாவில் சில்லறை வர்த்தகத் தொழில்துறையை டெஸ்கோ வால்மார்ட் போன்ற வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது என இந்திய அரசாங்கம் எடுத்த முடிவு தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த முக்கிய வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது.
அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தை வாக்கெடுப்பில் வென்றதம் மூலம் அரசாங்கம் முறியடித்துள்ளது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 253 வாக்குகளும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் விழுந்துள்ளன.
சர்வதேச சூப்பர்மார்க்கெட்டுகள் சந்தைக்குள் வந்தால் இந்தியாவின் சிறு கடைகளும் தொழில்களும் நசுங்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
ஆனால் சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடு வந்தால் நாட்டில் பொருளாதார வளர உதவும் என்று அரசாங்கம் வாதிடுகிறது.
Saturday, December 1, 2012
மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் உடல் தகனம்
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக் குறைவால் குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஜ்ரால் நேற்று மாலை உயிரிழந்தார். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது உடல் யமுனை நதிக் கரைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குஜ்ராலின் மகனும் அகாலி தள எம்.பியுமான நரேஷ் குஜ்ரா உட்பட இரு மகன்களும் பேரனும் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
குஜ்ரால் உடல் தகனம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Monday, November 26, 2012
புலனாய்வுத்துறை இயக்குநராகும் முதல் இஸ்லாமியர்

புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும். இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
Wednesday, November 21, 2012
பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண்கள் விவகாரத்தில் நடவடிக்கை
மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு நிறைவேற்றம்
Saturday, November 17, 2012
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு
சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.
Wednesday, November 7, 2012
6 கியாஸ் சிலிண்டர்களுக்கு வங்கி மூலம் ரூ. 3000 மானியம்: மத்திய அரசு முடிவு
ஆண்டுக்கு 6 மானிய சிலிண்டர்கள் என்ற தற்போதைய கட்டுப்பாட்டின்படி ஒரு நுகர்வோருக்கு ஆண்டுதோறும் 3 ஆயிரம் ரூபாய் மானியமாக வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒருவேளை, 9 சிலிண்டர்கள் வழங்கப்பட்டால் ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க மானியம் வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, கியாஸ் இணைப்பு உள்ளவர்கள் பெயரில் உடனடியாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மானிய விலையில் இனி கியாஸ் சிலிண்டர்களைப் பெற வங்கி கணக்கு அவசியம் என்று மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. வங்கி கணக்கு, அல்லது ஆதார் அடையாள அட்டைகளின் மூலம் நுகர்வோருக்கு அரசு வழங்கும் சமையல் சிலிண்டர் மானியம், இனி நேராக வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மத்திய அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, November 6, 2012
ஆந்திராவில் நீலம் புயலால் வெள்ளப்பெருக்கு: 100,000 பேர் வெளியேற்றம்( படங்கள் )
| ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக சுமார் 100,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். |
| நீலம் புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கரையோரத்திலுள்ள 6 மாவட்டங்களில் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் பெய்த மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வடைந்துள்ளதுடன், சுமார் 1,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் வெள்ளத்தால் தத்தளித்துக்கொண்டிருந்த சுமார் 2,000 பேருக்கு மீட்புப் பணியாளர்கள் உதவியளித்துள்ளனர். ![]() ![]() ![]() ![]() ![]() |

Sunday, November 4, 2012
கியாஸ் சிலிண்டரை தாமதமாக சப்ளை செய்தால் அபராதம்: பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை
புதுடெல்லி, நவ 4-
மத்திய அரசு சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்தனர். மக்களின் அதிருப்தியை சமாளிக்க சில மாநில அரசுகள் மானிய விலையில் கூடுதல் சிலிண்டர்கள் வழங்கப்டும் என்று அறிவித்தன.
இது ஒருபுறம் இருக்க, சிலிண்டர்கள் சப்ளை செய்வதில் ஏஜென்சிகள் தேவயில்லாமல் தாமதம் செய்வதாக ஏற்கனவே புகார்கள் இருந்து வருகின்றன.
இதுதொடர்பாக எண்ணை நிறுவனங்களுக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. தவிர, தற்போது, வீடு தோறும் சிலிண்டர்கள் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
Monday, October 29, 2012
ஆந்திர கடலோர மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவின் பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கம்மம் மற்றும் நலகொண்டா மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஓங்கோல் மாவட்டம் குண்டலகம்மா பகுதியை மையம் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தின் ஹியாத்நகர் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
ரெயில் கட்டணம் உயர வாயப்பு - பவன் குமார் பன்சால்
மத்திய மந்திரிசபை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்த பவன் குமார் பன்சால் ரெயில்வே மந்திரியாக பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ரெயில் பாதுகாப்பு குறித்து அதிரடியான ஒரு செய்தியை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- ரெயில்வே துறையில் உள்ள சிரமங்கள் குறித்து நான் எச்சரிக்கையுடன் இருக்கிறேன். தினந்தோரும் 11000-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று எங்களுக்கு தெரியும். அதை விரைவில் நிவர்த்தி செய்வோம். இப்போதைய பிரச்சினை மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டுமென்பதே.
Monday, October 22, 2012
திவாலான கிங்பிஷர்: கவலையே இல்லாமல் ஊர் சுற்றும் விஜய் மல்லையா
| கிங் பிஷர் விமான நிறுவனத்தின் உரிமங்கள் ரத்தாகியுள்ள நிலையிலும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருக்கிற போதிலும் அதைப்பற்றிய கவலையே இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார் விஜய் மல்லையா. |
| அவரது நிறுவனம் ரூ. 7000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கிறது. ஊழியர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கிறது. ஆனால் இந்த கவலையே இல்லாமல் விஜய் மல்லைய்யா தென்கொரியாவில் நடைபெறும் கார் பந்தயத்தை காண சென்றுவிட்டாராம். இதற்கிடையே அவரது மகன் சித்தார்த் மல்லைய்யா, 2013ம் ஆண்டில் வெளியாகும் கிங் பிஷர் காலாண்டருக்காக இளம் பெண்களைத் தேடி லண்டன் சென்றுள்ளார். விரைவில் கிங் பிஷர் காலாண்டருக்கான இளம் பெண்களுடன் நாடு திரும்புவேன் என டுவிட்டரில் கூறியுள்ளார். ஏற்கனவே, சம்பளபாக்கியுள்ள கிங்பிஷர் ஊழியர் ஒருவர் புதுடெல்லியில் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ![]() |
Subscribe to:
Posts (Atom)







