
ரெயில்வே துறையில் உள்ள சிரமங்கள் குறித்து நான் எச்சரிக்கையுடன் இருக்கிறேன். தினந்தோரும் 11000-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று எங்களுக்கு தெரியும். அதை விரைவில் நிவர்த்தி செய்வோம். இப்போதைய பிரச்சினை மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டுமென்பதே.
நேரம் தவறாமையும் சுத்தமும் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. கழிவறைகளை சுத்தம் செய்யவேண்டுமென்பது முதலில் கவனிக்கப்படவேண்டிய விஷயம். இதனால் பயணிகள் ரெயில் கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்பு ரெயில்வே அமைச்சராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் ராய் அரசின் அந்நிய முதலீட்டு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment