
வழக்கங்கள் இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருவதால் அமெரிக்காவை போல் இங்கும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி, வலி, தடித்திருத்தல், காம்பில் கசிவு அல்லது மார்பக அளவில் மாற்றங்கள் இதில் ஏதாவது இருந்தால் புற்றுநோய் தாக்கப்பட்டு இருக்கிறது என உணரலாம். 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் வருடம் ஒரு முறை அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறையாவது மெமோ கிராம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
மார்பகத்தை எக்ஸ்ரே படம் எடுக்கும் சோதனையே இந்த மெமோ கிராம் சோதனையாகும். குறிப்பாக இந்த நோய் குடும்பத்தில் தாய், மகன், சகோதரி யாருக்கேனும் தாக்கி இருந்தால் முதல் குழந்தை 30 வயதுக்கு மேல் கருத்தரித்தாலோ, 11 வயதுக்கு முன்பு மாத விலக்கு ஏற்பட்டாலோ, 55 வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்காமல் இருந்தாலோ, குழந்தை இல்லாமல் இருந்தாலோ, ஹார்மோன் மாத்திரைகள் அதிக நாட்கள் உட்கொண்டாலோ, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிட்டாலோ மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு.
இவர்கள் கண்டிப்பாக மெமோகிராம் சோதனை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் 100 சதவீதம் குணப்படுத்த முடியும். இதற்கான அனைத்து நவீன கருவிகளும் எங்கள் மருத்துவமனையில் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க சுயபரிசோதனை முக்கியம்.
இந்த நோய் தொற்று நோய் அல்ல. நோயில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக எடை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை சரியாக கடைபிடித்தால் இந்நோயின் தாக்கம் இருக்காது.
No comments:
Post a Comment