click me

Saturday, October 27, 2012

மீண்டும் பர்மாவில் தொடரும் வன்முறைகள்; ஐநா எச்சரிக்கை


பர்மாவின் மேற்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள இனரீதியான படுகொலைகள் அந்நாட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.
ரோஹிஞ்சா முஸ்லிம்களை தனது பிரஜைகளாக ஏற்க மறுக்கும் பர்மிய அரசு, அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று கூறிவருகிறதுஉள்ளூர் பௌத்தர்களுக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் வன்முறைகளில் இந்தவாரம் மட்டும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ராக்கைன் பிராந்திய அரச பேச்சாளர் ஒருவர் கூறினார்.பர்மாவில் கடும்போக்கு கும்பல்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நடத்துகின்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐநாவின் தலைமைச் செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், அரசின் அண்மைய சீர்திருத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் சீர்குலையும் என்று பான் கி-மூனின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நிரம்பிவழிகின்ற முகாம்களில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தஞ்சமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோஹிஞ்சா முஸ்லிம்களை பர்மிய அரசு அதன் பிரஜைகளாக அங்கீகரிக்கவில்லை.
அவர்களை அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து வந்த சட்டவிரோத குடியேறிகளாகத்தான் பர்மா கருதுகிறது.
ஆனால், மேற்கு பர்மாவில் வாழும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை இனக்குழு என்று ஐநா கருதுகிறது.
கடந்த மே மாதம், ராக்கைன் பிராந்தியத்தில் இளம் பௌத்த பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் முதல் அங்கு மத ரீதியான தொடர் வன்முறைகள் நடந்துவருகின்றன.

No comments:

Post a Comment