click me

Monday, October 29, 2012

மியான்மரில் தொடரும் கலவரம்: உயிருக்கு பயந்து ஓடி வந்த நபர்கள் பட்டினியால் தவிப்பு (படங்கள் )

மியான்மரின் ரகின் மாகாணத்தில் கலவரம் நீடிப்பதால், 22 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.
மியான்மர் நாட்டில் பங்களாதேஷ் எல்லையை ஒட்டி அமைந்துள்ள, ரகின் மாகாணத்தில் ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.
இதில் 100க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின் சிறிது காலம் அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 6 நாட்களாக நடந்து வந்த கலவரத்தில் மட்டும் 82 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
நிலைமை மிக மோசமடைந்து வருவதால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கதேசத்துக்கு சென்றனர்.

ஆனால் அங்கு ஏற்கனவே மியான்மரில் இருந்து ஓடி வந்த பல லட்சக்கணக்கான அகதிகள் இருப்பதால், தற்போது வந்த நபர்களை விரட்டி அடிக்கின்றனர்.
இந்நிலையில் சுமார் 22 ஆயிரம் பேர் அருகில் உள்ள தீவு பகுதிகளிலும், மலை காடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். இவர்கள் உணவுக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து ஐ.நா அமைதி குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment