
கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன். டெய்லர் வேலை செய்து வருகிறார். தொடர் மழை காரணமாக கோதண்டராமனின் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்தது. இதையடுத்து கோதண்டராமனின் மனைவி மழை நீரை வெளியேற்ற வடிகால் வெட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் பார்த்தசாரதி (வயது 7) இடிபாடுகளில் சிக்கி கொண்டான்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் பார்த்தசாரதியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பார்த்தசாரதி இறந்து போனான்.
இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் தற்போது 44.7 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
No comments:
Post a Comment