
பரங்கிப்பேட்டை: தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ள நிலையில், இப்புயல் நாளை மாலை தமிழகத்தின் கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களை நேற்று முதல் துணை ஆட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் கலந்துக் கொண்டார்.

கூட்டத்திற்கு பிறகு, நம்மிடம் பேசிய பேரூராட்சித் தலைவர், "பரங்கிப்பேட்டை பேரூராட்சி, புயலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இறங்கியுள்ளது. பேரூராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கின்றார்கள் " என்று கூறினார்.
அதேபோன்று பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ்.நூர் முஹம்மது தெரிவிக்கையில், "இப்புயல் வலுவிழந்து, நம்மை தாக்க வேணடாம் என்று பிரரர்த்தனை செய்கிறோம். அப்படி, புயல்பாதிப்பு நமது பகுதியில் ஏற்பட்டால் பேரூரட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளோம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்க ஏதுவாக மஹ்மூதியா திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்கள் தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
நன்றி :mypno
No comments:
Post a Comment