
போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய சமீபத்திய ஆய்வு இதனை நிரூபித்துள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நிறுவனங்களை போர்ப்ஸ் நிறுவனம் கணக்கெடுத்து டாப்-50 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.
நிறுவனங்களின் வருவாய், மூலதனம், செயல்திறன, பங்கு விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலை தயாரித்துள்ளனர்.
இதில் முதல் 11 இடங்களைப் பிடித்த முன்னணி நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டி.சி.எஸ். ஆகிய ஐ.டி. நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
சீனாவைச் சேர்ந்த 4 நிறுவனங்களும் முதல் 11 இடங்களில் உள்ளன. இதேபோல் மலேசியா, தென்கொரியா, தைவான் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இதில் இடம் பிடித்துள்ளன.
No comments:
Post a Comment