சீனாவை சேர்ந்த ஹூருன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இந்த புள்ளி விபர பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானியும், இரண்டாம் இடத்தில் ஏர்செல்-மிட்டல் நிறுவன தலைவர் எல்.என். மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.94 ஆயிரத்து 500 கோடி ஆகும்.
இவர்களைத் தொடர்ந்து விப்ரோ மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி, சன் பார்மசூட்டிக்கல் நிறுவனம் திலிப்ஷாங்கி, ஷபூர்ஜி பல்லோஞ்ஜி அண்ட் கோ (டாடா நிறுவனத்தில் மிகப் பெரிய பங்குதாரர்) பல்லோஞ்ஜி மிஸ்ட்ரா, ஈஸ்ஸா எனர்ஜியின் ஷாஷி மற்றும் ரவிரூயா, கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால்சிங், கிராஸிம் நிறுவனத்தின் குமாரமங்கலம் பிர்லா, எச்.சி.எல். நிறுவனத்தின் சிவ் நாடார், பார்தி ஏர் டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் ஆகியோர் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.
பெண் பணக்கார இந்தியர்களில் 5 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் சாவித்திரி ஜிண்டால், இவருடைய சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி.
இந்திய பணக்காரர்கள் 100 பேரில் 36 பேர் மும்பையை பூர்வீகமாக கொண்டவர்கள், 22 பேர் டெல்லியிலும், 15 பேர் பெங்களூரிலும் வசிப்பவர்கள் ஆவார்.
இவர்கள் தவிர, 5 பேர் வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆவர். அவர்களில் லண்டனில் வசிக்கும் லட்சுமி மிட்டலும் இருக்கிறார்.
தற்போது இந்தப் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
பெரிய தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் இவரது சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரத்து 300 கோடி.
இப்பட்டியலில் அடுத்ததாக முத்தூட் நிதி நிறுவனங்கள் நடத்தி வரும் ஜார்ஜ் முத்தூட் இடம் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஆகும்.
சீனாவை சேர்ந்த ஹூருன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இப்புதிய மதிப்பீட்டின் படி தனிநபர்களாக தங்கள் உழைப்பில் உயர்ந்து முன்னிலை பெற்றவர்களே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பங்குகள், சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment