click me

Monday, October 22, 2012

வலதுசாரி அமைப்பினர் போராட்டம்:பிரான்சில் இனி மசூதிகள் வேண்டாம்

பிரான்சின் Poitiers என்ற நகரில் உள்ள மசூதியை சூழ்ந்து கொண்டு வலதுசாரி தீவிரவாதிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு பிரான்சின் முஸ்லிம் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வலதுசாரி இயக்கத்தாரின் இன உணர்வையும், பகையையும் முற்றிலுமாக ஒடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது
மேலும் இது போன்ற குழுக்களை தடை செய்யவும், அவர்களின் இணையதளங்களை மூடவும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளன.
இது குறித்து MRAP என்ற அமைப்பினர் கூறுகையில், இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மிகவும் மோசமானவர்கள். இவர்கள் பிரான்சின் வசிக்கும் முஸ்லிம்களை போருக்கு அழைக்கிறார்கள்
இவர்களது செயல் மக்களிடையே முஸ்லிம்கள் மீது பகையையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர்.
இப்போராட்டம் வெறுக்கத்தக்க செயல் என உள்துறை அமைச்சர் மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment