ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரரான துரை தயாநிதியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக மதுரை பொலிஸார் பல வியூகங்களை வகுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மனைவி, அம்மா என குடும்பத்தினர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் மகத்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். மகத் மங்காத்தா படத்தில் நடித்தவர்.
நடிகை டாப்சியுடன் நட்பு வைத்துக் கொள்வது தொடர்பான கலாட்டாவில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனுடன் கடும் சண்டையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரும் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்ற அடிப்படையில் மகத்தைப் பிடித்து விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனராம். |
No comments:
Post a Comment