
இதனால் விரைவில் பகலிரவு டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் காணலாம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த அவுஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன.
இதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐ.சி.சி) கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த ஐ.சி.சி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும்.
நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும். கலர் பந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நேரத்தில் விளையாட வேண்டும், போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் நிறம், வகை, தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சமீபத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் சில புதிய விதிமுறைகளை ஐ.சி.சி அறிவித்தது.
இதன்படி பவர்பிளே, களத்தடுப்பு விதிமுறை, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுதல், நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்தல், நோ-பால், தாமதமாக பந்துவீசுதல், சூப்பர்-ஓவர் முறை போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்தது.
இந்த மாற்றங்கள் இன்று முதல் பின்பற்றப்படும். இதன்படி இன்று பல்லேகெலேயில் நடக்கவுள்ள டி20 போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன என்றும் இப்போட்டியில் இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment