click me

Saturday, October 27, 2012

சென்னை விமான நிலையத்தில் நிருப‌ர்களை கெ‌ட்டவா‌‌ர்‌த்தைகளா‌ல் ‌தி‌ட்டிய ‌‌விஜயகா‌ந்‌த்

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் விஜயகாந்த் மோதல்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி காண்பதற்காக அருகில் சென்றனர். அவர்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், இதை அங்கு போய் கேளுங்கள். தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, டெங்கு காய்ச்சல் பரவுகிறது இதெல்லாம் உங்களுக்கு தெரிவில்லையா என்றார். 


மீண்டும் பத்திரிகையாளர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்தித்ததை குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமையில் ஆவேசமாக பேசினார். அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தை சமாதானப்படுத்தினார்.அ‌ப்போது, ‌தினகர‌ன் ‌‌‌‌நிருப‌ர் ‌பாலு, விஜயகா‌ந்‌திட‌ம் ரெ‌க்கா‌ர்டு மை‌க்கை ‌நீ‌ட்டினா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அட‌ை‌ந்த ‌‌விஜயகா‌ந்‌த் அ‌ந்த ‌நிருபரை சரமா‌ரியாக கெ‌ட்ட வா‌ர்‌த்தைகளா‌ல் ‌தி‌ட்டினா‌ர்.

பி‌ன்ன‌ர், கூடி‌யிரு‌ந்த ‌நிருப‌ர்களை பா‌ர்‌த்து, சொ‌ல்லு‌ங்க சா‌ர் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியது‌ம், முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் ச‌ந்‌தி‌த்து பே‌சியது கு‌றி‌த்து ‌நிருப‌ர்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌க்காத ‌விஜயகா‌ந்‌த், ‌மி‌ன்சார‌ம், டெ‌ங்கு ப‌த்‌தி பேசுவோ‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். அ‌ப்போது, சூ‌ரிய ‌மி‌ன்ச‌க்‌தி மூல‌ம் 3000 ஆ‌யிர‌ம் ‌மெகாவா‌ட் ‌மி‌‌ன்சார‌ம் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளாரே எ‌ன்று ஒரு ‌நிருப‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

இதனா‌ல் மேலு‌ம் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌விஜயகா‌ந்‌த், அ‌ந்த அ‌ம்மா‌விட‌ம் போ‌ய் கேளுடா எ‌ன்று கோபமாக பே‌சி‌வி‌ட்டு மன‌ை‌வியுட‌ன் நட‌ந்து செ‌ன்றா‌ர்.

நிருப‌ர்க‌ள் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்று கே‌ள்‌வி கே‌ட்க முய‌ன்றா‌ல் ஆ‌த்‌திர‌‌த்‌தி‌ன் உ‌ச்‌சி‌க்கே செ‌ன்ற ‌விஜயகா‌ந்‌த், நா‌ய்... நா‌ய்... எ‌ன்று ‌நிருப‌ர்களை ‌‌தி‌ட்டி‌வி‌ட்டு ‌விமான ‌நிலைய‌த்‌திற‌்கு‌ள் ‌விஜயகா‌ந்‌த் செ‌ன்று ‌வி‌ட்டா‌ர்.

No comments:

Post a Comment