click me

Wednesday, October 17, 2012

கட்காரியின் ஊழலையும் வெளிப்படுத்தினார் கெஜ்ரிவால்!

ஊழலுக்கு எதிராக இந்தியா அமைப்பின் அர்விந்த் கெஜ்ரிவால் இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் முகமுடியை கிழித்து வருகிறார். ராபர்ட் வத்ரா, சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது ஊழல் புயலில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்பவர் பாஜகவின் தேசிய தலைவர் நிதின் கட்கரி.

மகாராஷ்டிராவின் அஜித்பவாருடன் கைகோர்த்து நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விவசாய நிலங்களை 'ஸ்வாஹா' செய்திருக்கிறார் கட்கரி என்று குற்றம்சாட்டியுள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.

அஞ்சலி தமானியா என்ற சமூக ஆர்வலர், முன்னாள் மகாராஷ்டிரா நீர்பாசனத் துறை அமைச்சரும், தேசியவாத்க காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரும் நிதின் கட்காரியும் இணைந்து பல நூற்றுக்கணக்கான விளை நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரித்து தனது சொந்த நலன்களுக்காக பயன்படுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளதையடுத்து அர்விந்த் கெஜ்ரிவால் இப்போது நிதின் கட்கரியின் நியாயவாத முகமுடியைக் கிழித்து எறிந்துள்ளார்.


அதேபோன்று விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டிய நீரை தங்கள் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். நிதின் கட்கரி, பாஜக, என்.சி.பி. காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் 71 மின் உற்பத்தி நிலையங்களை கட்டுமானம் செய்து வருகின்றனர், இதற்கான தண்ணீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் விதர்பா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வறட்சியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விதர்பா விவசாயிகள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment