click me

Tuesday, October 30, 2012

வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி

வியட்நாம் ஊடாக கரைகடந்துள்ள சூறாவளியொன்று இப்போது தென் சீனாவுக்குள் நகர்ந்துள்ளது.வியட்நாமின் வடக்கு பிராந்தியத்தில் சொன்-டின் என்ற இந்த சூறாவளியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு வயல் காணிகளும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசியுள்ள இந்த சொன்- டின் புயலே அந்நாட்டை இந்த ஆண்டில் தாக்கிய மிகப்பெரிய சூறாவளியென்று வியட்நாம் உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது மிக வேகத்துடன் தென் சீனாவுக்கு நகர்ந்துள்ள இந்த சூறாவளி கடுமையான புயல்மழையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment