
பரங்கிப்பேட்டை: நேற்று மாலை முதல் பரங்கிப்பேட்டையில் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று வந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். விடிய விடிய இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் இதனிடையே, பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை நாகைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக கடற்கரையோர பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். கடந்த 25 ஆம் தேதி வங்க கடலில் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது வலுபெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.
No comments:
Post a Comment