நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனத்தின் சந்திப்பு அடங்கிய அந்த அபூர்வ காணொளி இதோ உங்கள் பார்வைக்கு :
(வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது.
நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார்.
- அப்துல் கையூம்
No comments:
Post a Comment