click me

Thursday, October 25, 2012

குர்பானிக்காக குவிந்த ஆடுகள்-ஒட்டகங்கள்: ஆடு விலை ரூ.20 ஆயிரம்; ஒட்டக விலை ரூ.1.5 லட்சம் சென்னையில்

சென்னையில் குர்பானிக்காக குவிந்த ஆடுகள்-ஒட்டகங்கள்: ஆடு விலை ரூ.20 ஆயிரம்; ஒட்டக விலை ரூ.1.5 லட்சம்ஆந்திர மாநிலம் கடப்பா, குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புளியந்தோப்பு, எம்.கே.பி.நகர், வண்ணாரப்பேட்டை, ரெட்டேரி பகுதிகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. 

சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ஆடுகள் வாங்கி செல்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப ஒன்று முதல் நான்கைந்து ஆடுகள் வரை வாங்கி செல்கிறார்கள். லோடு ஆட்டோக்கள் மற்றும் கால்நடையாக ஆடுகளை கொண்டு வருகிறார்கள். 

புதுப்பேட்டையில் இன்று நூற்றுக்கணக்கான ஆடுகள் குவிந்தன. பெரிய ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் வரை விற்கிறது. பார்க்க கம்பீரமாக இருக்கும் ஆடுகள் நல்லவிலைக்கு விற்பதாகவும், வியாபாரம் அமோகமாக நடப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 

இதேபோல் குர்பானிக்காக வடமாநிலங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் வண்ணாரப்பேட்டை நேதாஜி நகருக்கு வந்துள்ளன. ஒரு ஒட்டகத்தின் விலை ரூ.1.5 லட்சம் ஆகும்.

No comments:

Post a Comment