பரங்கிப்பேட்டை: நான்கு நாட்கள் கழித்து மீண்டும் இன்று காலை முதல் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதினால் வெள்ளாறு கரை புரண்டு ஒடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை பகுதியில் வட்டாச்சியர், துணை ஆட்சித் தலைவர், வருவாய் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் கடற்சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
சென்னை, கடலூர், நாகை ஆகிய துறைமுகங்களில் ஒண்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி அந்தமான் நீக்கோபார் தீவுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.







நன்றி :mypno
No comments:
Post a Comment