click me

Monday, October 22, 2012

கூட்டுக் குடும்பங்களுக்கு 12 மானிய விலை சிலிண்டர்!

சமையலறை கொண்ட கூட்டுக் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு மானிய விலை சிலிண்டர் 12 அளிக்கப்படும் முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது குடும்பம் ஒன்றிற்கு மானிய விலை சிலிண்டர் 6 மட்டுமே வழங்க முடிவெடுக்கபப்ட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் 2 சமையலறை 2 இணைப்புகள் கொண்ட குடுபங்கள் கஷ்டப்படுகின்றன. இந்தப் பிரச்சனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து பெட்ரோலிய நிறுவன நிர்வாக இயக்குனர் கூறியதாவது:

பல கூட்டுக்குடும்பங்களில் ஒரேயொரு சமையலறைதான் உள்ளது. இரண்டு சமையலறை, 2 இணைப்புகள் உள்ளவர்கள் குறித்து உண்மையான விபரங்களை அளித்தால் அவர்களுக்கு 12 சிலிண்டர்களையும் மானிய விலையில் வழங்கலாம்.

இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment