தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சராசரி அளவைவிட 40 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது.


இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தொடர் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டு இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதன் விளைவாக வங்க கடலில் உள்ள ஈரம் மிகுந்த காற்றை தமிழ்நாட்டின் வழியாக ஈர்த்தது. இதன் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும், வட தமிழ்நாட்டின் அநேகமாக பகுதிகளிலும் பலத்த மழை எதிர்பார்க்கலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர், நாகையில் 13 செ.மீட்டர் மழையும், நீலகிரியில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. திருக்கோவிலூர், ஸ்ரீ வில்லிபுத்தூரில் 9 செ.மீ. மழையும், கோவில்பட்டியில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
No comments:
Post a Comment