
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் யாழ் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகின்றது. யாழ் குடாநாட்டில் மழை பெய்யும் வேளையில் வீசக்கூடிய கடுமையான காற்று குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும், தாழ் நிலப்பகுதி மக்கள் அனர்த்தங்களுக்கு ஏற்றபடி தயாராக இருக்குமாறும் யாழ் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இரவு நேரத்தில் அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாரத்தில் அதிக மழை வீழ்ச்சி காணப்படும் என்றும், மின்னல் தாக்கம் அச்சுவேலி, காங்கேசன்துறை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வீசக்கூடிய கடுமையான காற்று மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும், யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment