click me

Monday, October 29, 2012

முகலாய மன்னர்களின் அரிய பொக்கிஷங்களின் கண்காட்சி

முகலாய மன்னர்களின் அரிய பொக்கிஷங்கள் அடங்கிய கண்காட்சி இங்கிலாந்தில் உள்ள நூலகத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் முகலாயர்கள் 200 ஆண்டு காலம் ஆட்சி செய்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த அரிய பொருட்களின் கண்காட்சி, இங்கிலாந்தில் உள்ள நூலகத்தில் நவம்பர் 9ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நடக்கிறது.
இதில் இந்தியாவில் கடைசியாக ஆட்சி செய்தி முகலாய மன்னர் இரண்டாம் பகதூர் ஷாவின் விலை உயர்த்த ரத்தினங்கள் பதித்த கிரீடம் இடம்பெறுகிறது.

இவை தவிர கலை நுணுக்கங்கள் நிறைந்த முகலாயர்களின் பலவித நகைகள், அரிய ஆபரணங்கள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
கரும்பச்சை நிற கற்கள் பதிக்கப்பட்ட கைப்பிடியுடன் தயாரிக்கப்பட்ட விலைமதிப்பில்லா சாமரம் இடம்பெறுகிறது. இது 17ம் நூற்றாண்டை சேர்ந்தது.
இதை முகலாய மன்னர் ஷாஜகானின் வேலையாட்கள் பயன்படுத்தினர் என்று கூறுகின்றனர். தவிர ஷாஜகானின் தந்தை ஜகாங்கீர் ஷா பயன்படுத்திய அரிய பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

No comments:

Post a Comment