click me

Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

Saturday, December 29, 2012

வட இலங்கை வெள்ளத்தில் ஏராளமானோருக்கு பாதிப்பு


இலங்கையின் வடக்கே வன்னிபிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு வரையில் இரண்டு தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் இருக்க முடியாமல் வெள்ளம் புகுந்ததனால், 23, 000 பேர் 125 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மன்னாருக்கான பிரதான வீதி, முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவு நகருக்குச் செல்லும் பிரதான வீதி, ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புக்குச் செல்லும் வீதி என்பன வெள்ளத்தினால் மூழ்கியிருப்பதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Sunday, December 23, 2012

இலங்கையில் மழை வெள்ளத்தினாலும் மண் சரிவுகளினாலும் ஏற்பட்ட மரணங்கள்

undefined
இலங்கையில் மழை வெள்ளத்தினாலும் மண் சரிவுகளினாலும் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையும் மேலும் உயர்ந்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளத்தினால் மண் சரிவுகள் ஏற்பட்ட மத்திய மாகாணத்திலேயே கூடுதலான உயிரிழப்புகளும் ஆட்கள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Wednesday, December 19, 2012

மழை வெள்ளத்தால் இலங்கையில் 13 பேர் பலி


இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள்.
பல மாவாட்டங்களில் பெரும் பாதிப்புகள்
பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்று அரச அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மாத்தளைப் பகுதியிலேயே அதிகமான அளவுக்கு மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

Monday, October 29, 2012

இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும்!- முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயர்வு


வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இன்னும் சில மணித்தியாலயங்களில் முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளை புயல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

தற்போது முல்லைத்தீவுக்கு வெளியே 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இத் தாழமுக்கம் புயலாக மாறி தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், இது இன்று மாலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இப்புயலானது மணிக்கு 60 முதல் 80 வரையான வேகத்தில் இப்பகுதிகளை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று காலை ஏற்பட்ட கடும்காற்று காரணமாக கடற்றொழிலாளர்களின் படகுகள் சில சேதமடைந்தள்ளதாக தெரியவருகின்றது. 

யாழ்.மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள யாழ். அலுவலகமும் கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. 

அத்தோடு யாழ்ப்பாணம் முழுவதிலும் கடுமையான இருளில் மூழ்கியுள்ளதோடு வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடும் காற்றும் வீசி வருகின்றது. 

இதேவேளை சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக வட பகுதியின் கரையோரங்களிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் கடுமையான மழை


இலங்கையின் வடபகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காற்று மழையுடன் கூடிய சீரற்ற காலை நிலை காரணமாக வடக்கு மற்றும் ஏனைய பகுதி மீனவர்கள் கடலுக்குத் தொழிலுக்குச் செல்லவில்லை.
தாழமுக்கம் காரணமாக கடலிலும் காற்றுவீசும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே, அறிவித்திருக்கின்றது.

இன்று மதியம் வரையிலான 24 மணிநேர காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடபகுதியில் இடியுடன் கூடிய அதிகூடிய மழை வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
ஆவணப்படம்பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு கூரை விரிப்புகள் தரைவிரிப்புக்கள் பொன்றவற்றைத் தருமாறு கோரியிருப்பதாகவும், அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மந்துவில், ஆனந்தபுரம், மல்லிகைத்தீவு போன்ற பகுதிகளில் தகரக் கூரைகளைக் கொண்டிருந்த தற்காலிக வீடுகளின் தகரங்ள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடாரங்களும் பல இடங்களில் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது. இனதால் பல குடும்பங்கள் மழையினால் நனைந்து பெரும் சிரமங்களுக்கு உள்ளாக நேர்ந்துள்ளது. வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

Wednesday, October 24, 2012

யாழ்ப்பாணத்தில்;யாழில் மழை தொடரும்

யாழில் மழை தொடரும் - வளிமண்டளவயாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென யாழ் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடைப்பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் இது டிசம்பர் மாதத்தின் பின்னர் கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய அடைமழையாக மாறும் வாய்ப்புக்களும் உள்ளதாகவும் யாழ் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் யாழ் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகின்றது. யாழ் குடாநாட்டில் மழை பெய்யும் வேளையில் வீசக்கூடிய கடுமையான காற்று குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும், தாழ் நிலப்பகுதி மக்கள் அனர்த்தங்களுக்கு ஏற்றபடி தயாராக இருக்குமாறும் யாழ் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Thursday, October 18, 2012

சீனாவிடம் ததேகூ வலியுறுத்தல்;இலங்கைக்கு ராணுவ உதவி வேண்டாம்

வட இலங்கை நிலம் இலங்கையில் இனப்பிரச்சினையில் ஒரு அரசியல் தீர்வை எட்ட முயலுமாறு, இலங்கை அரசுக்கு சீனாவும் அழுத்தம் தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறார்கள்
.சமீபத்தில் இலங்கைக்கான புதிய சீனத்தூதரை சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, வடக்கில் நடைபெற்று வரும் ராணுவ கட்டமைப்புத் திட்டங்கள் பல சீன உதவியுடன் நடைபெற்றுவருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதை , தூதருக்கு சுட்டிக்காட்டி, இலங்கையில் போர் முடிந்த வட மாகாணத்தில் இன்னும் சகஜ நிலை உருவாகவில்லை, மக்கள் காணிகள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பறிக்கப்பட்டிருக்கின்றன , அங்கு சுமார் ஒரு லட்சம் ராணுவத்தினர் இன்னும் நிலை கொண்டிருக்கிறார்கள், சாதாரண அரசியல் நடவடிக்கைகளைக் கூட முன்னெடுத்தால் அதில் ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குழப்புகிறார்கள் என்பதையெல்லாம் முன்வைத்த்தாக, இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்:இலங்கையில் போர் முடிவுக்கு பின் ராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் முதல் போராட்டம்

இலங்கையில் போர் முடிவுக்கு பின் ராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் முதல் போராட்டம்யாழ்ப்பாணம்,அக் 18-

இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு ராணுவத்துக்கு எதிராக மக்கள் வாய் திறக்கவே பயப்பட்டனர். ஆனால் இப்பபோது முதன் முதலாக ராணுவத்துக்கு எதிராக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இந்த போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. 

சமீபத்தில் நல்லூர் பஞ்சாயத்து தலைவர் வசந்தகுமார் ராணுவத்தால் தாக்கப்பட்டார். இதை கண்டித்தும், தமிழர் பகுதியில் இருந்து ராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. 

யாழ்ப்பாணம் பஸ் நிலையம் எதிரே நடந்த இந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். போராட்டத்தில் எம்.பி.க்கள் சரவண பவன், ஸ்ரீதரன், முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.