click me

Wednesday, January 2, 2013

சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி

சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி
சென்னை, ஜன. 1-


சென்னையில் இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடும் மாஞ்சா காற்றாடி, அடிக்கடி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த அடுத்தடுத்த அசம்பாவித சம்பவங்களையடுத்து நகரம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மாஞ்சா காற்றாடி விடுபவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காற்றாடி பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே மாஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது என்பதற்கு இன்று நடந்த பலியே சாட்சியாக அமைந்துள்ளது.


சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் இன்று பல்லவன் சாலையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே பறந்து வந்த மாஞ்சா கயிறு அவரது கழுத்தை விறுட்டென்று அறுத்தது. இதனால் ரத்தவெள்ளத்தில் துடித்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. youtube 4.com YouTube Video - Vimeo
    Youtube videos, videos and videos related to video game. A youtube mp3 game for the Sega Genesis. The games on youtube4.com  Rating: 4.8 · ‎6,873 votes

    ReplyDelete