
சென்னையில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள்(3ம் திகதி) நடக்கிறது. போட்டிக்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றுள்ளனர்.
கொல்கத்தா மைதானம் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இதுவரை அமைந்திருக்கிறது. இந்தியாவுடன் நடந்த அனைத்து போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவும்- பாகிஸ்தானும் இந்த மைதானத்தில் மோதுகின்றன.
2004ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி கடைசியாக இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிய போது இந்திய அணியில் சச்சின், டிராவிட் போன்ற முன்னணி வீரர்கள் இருந்தனர்.
ஆனால் இப்போது முன்னணி வீரர்கள் எல்லாம் ஓய்வு பெற்ற பின்னர் சேவக் மற்றும் யுவராஜ் மட்டும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை கடைசியாக இன்சமாம் தலைமையில் களமிறங்கியது. அந்த அணியிலும் தற்போது யூனுஸ்கான், சோயிப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகியோர் மட்டுமே ஆடுகின்றனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் புதுமுகங்கள், எனவே கொல்கத்தா போட்டியில் சரித்திரம் மாறலாம்.
இந்திய அணியில் இளம் வீரர்கள் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டுமென்று முனைப்புடன் இருக்கிறார்கள். அதே போன்று பாகிஸ்தானும் கொல்கத்தா மைதானத்தில் வெற்றியை தக்க வைத்து கொள்ள தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும்.
எனவே நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment