click me

Showing posts with label பரங்கிப்பேட்டை செய்திகள். Show all posts
Showing posts with label பரங்கிப்பேட்டை செய்திகள். Show all posts

Monday, December 31, 2012

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு புதிய செயலாளர்


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் புதிய செயலாளராக ஜுன்னத்மியான் தெருவில் வசிக்கும் G.முஹம்மது மீரான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனத்தை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது செய்திருக்கிறார்.

புதிய செயலாளர் G.முஹம்மது மீரானுக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் , தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் M.S.அலி அக்பர், பொதுச்செயலாளர் O.முஹம்மது கவுஸ், செயலாளர் M.சுல்தான் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தகவல் & படம்: இ.ஐ.ஜ

Wednesday, December 26, 2012

பரங்கிப்பேட்டையில் கரூர் வைஸ்யா வங்கி (ATM) இயந்திரம்


தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனதுதானியங்கி காசாளர் இயந்திரம் (ATM) ஒன்றை  பரங்கிப்பேட்டை நகரில் அமைத்துள்ளது. இதற்கான திறப்பு விழா பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் இன்று காலை நடைபெற்றது. தானியங்கி காசாளர் இயந்திரத்தை (ATM)  R.தவ்ஹீத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் உறுப்பினர்கள் அருள்ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர்  கலந்துக் கொண்டனர்.
 பரங்கிப்பேட்டை நகரில் இதுவரை கிளை அமைக்காத கரூர் வைஸ்யா வங்கி தனது காசாளர் இயந்திரத்தை (ATM)   அமைத்திருப்பது பாராட்டுக்குரியது,

Wednesday, December 19, 2012

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 66 புதிய ஆசிரியர்கள் நியமனம்


பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் காலியாக இருந்த 66 இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்வர் ஜெயலிலதா கடந்த 13ம் தேதி சென்னையில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கினார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் புதிதாக 66 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 62 ஆசிரியர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.
ஏற்கனவே காலியாக இருந்த 66 பணியிடங்களும் நிரப்பட்டுள்ளதாக அதிகாரிகள்

thanks:mypno

Thursday, December 6, 2012

டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு, த.மு.மு.க.வின் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு,பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக கடலூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சவுக்கத் அலி கான் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக இன்று காலை 9 மணியளவில், பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. கிளை சார்பில் 10 இரண்டு சக்கர வாகனங்கள உட்பட 23 வாகனங்களில் நகர தலைவர் ஹசன் அலி தலைமையில்  அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.
தமுமுக ஊழியர் கொள்ளுமேடு ரிஃபாயி இறைமறை வசனங்களை ஓதினார். தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார். தமுமுக மாவட்ட பொருளாலர் ஏ.எம்.அய்யுப் மமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் உள்ளிட்ட மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

Saturday, December 1, 2012

கும்மத்பள்ளி புதிதாய் கட்ட அடிக்கல்


பரங்கிப்பேட்டை: நேற்று (30-11-2012) காலை எட்டு மணியளவில் கும்மத்பள்ளியில் புதுபள்ளியின் புதிய  கட்டுமானப்பணிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கபட்டது, இந்நிகழ்சியில் H. அப்துஸ் சமது ராஷதி, மற்றும் புதுபள்ளி இமாம் M.S. காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி முன்னிலை வகிக்க, முத்தவல்லி H.J. பஷீர் அஹ்மத் தலமை தாங்கினார்.

Tuesday, November 27, 2012

தீ விபத்து: துணை ஆட்சியர், மற்றும் செல்வி ராமஜெயம் நேரில் ஆய்வு!

பரங்கிப்பேட்டை: ஜெயின் பாவா தர்கா வளாகத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த திடீர் தீவிபத்தில் மிட்டாய் நானா வீடு என்று அறியப்படும் ஒரு குடிசை வீட்டின் முக்கிய ஆவனங்கள், ரொக்கப் பணம், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தீக்கிரையாயின. தீவிபத்தினால் ஏற்பட்ட சேதத்தினை நேற்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பார்வையிட்டனர்.
இதனையடுத்து இன்று துணை ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான செல்விராமஜெயம் நேரில் ஆய்வு செய்து பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மதுவிடம் சேதவிபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பிறகு, துணை ஆட்சியர் மற்றும் செல்வி ராமஜெயம் தலா ரூபாய் 5 ஆயிரத்தினை தீவிபத்தினால் இழப்புக்கு ஆளான மும்தாஜ் கலிமா என்பவரிடம் வழங்கினர். அப்போது, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, ஜமாஅத் நிர்வாகிகள், 1-வது வார்டு கவுன்சிலர் யூ. ஹபிபுர் ரஹ்மான், 11-வது வார்டு கவுன்சிலர் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 1-வது வார்டு கவுன்சிலர் ஹபிபுர் ரஹ்மான் சகோதரர் யூ. ஹுசைனுல் ஆபிதீன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனுஸ் முன்னிலையில்  ரூபாயிரம் 5 ஆயிரம் வழங்கினார்.

த.மு.மு.க. நகரத் தலைவராக ஜி.ஹசன் அலி தேர்வு!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. பொதுக் குழு நேற்று மாலை 7 மணி அளவில் ஹபீபுல்லா மினி மஹாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. வின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் கூட்ட முடிவில், அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வலியுறுத்துதல், பக்கீர்மாலிமார் பள்ளிவாசல் குளம்  தூர்வாரி சுத்தம் செய்ய பேரூராட்சியை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் பட்டியல்:

சிங்கப்பூர் சிலாட் சாம்பியன்: தங்கம் வென்றான் பரங்கிப்பேட்டை சிறுவன்

சிங்கப்பூர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலாட் சாம்பியன்காண போட்டி நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிலாட் செண்டெங் பெலளாங் அணியின் சார்பாக   பங்கு பெற்ற முஹம்மது கெவின் என்கிற பரங்கிப்பேட்டை சிறுவன் பங்கு கொண்டான். இவன் அணியை சார்ந்த மாணவனை வீழ்த்தி ஜூனியர் சிறுவர்களுக்கான  தங்கப் பதக்கம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றான்.

கடந்த 4 மாதங்களில்பயிற்சி பெற்று குறுகிய காலத்திலேயே தங்கம் வென்று  பாராட்டினைப் பெற்றுள்ள இச்சிறுவன் பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவைச் சார்ந்த குல் முஹம்மது அவர்களின் பேரனும் ஜி.எம். மரக்கச்சி மரைக்காயரின் மகனும் ஆவான்.

Monday, November 26, 2012

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து


பரங்கிப்பேட்டை, நவ 26: பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி ஜெயின் பாவா தைக்கால் பகுதியை சேர்ந்த கோழிக்கடை முஸ்தபா அவருடைய குடிசை வீடு (மிட்டாய் நானா வீடு) நேற்று நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் தீபிடித்து எரிந்தது. இதயனையறிந்த அக்பக்கதினர், தீயனைப்பு துறையினரரும் சேர்ந்து தீயைனைந்தனர்.


இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் அவருடைய மகளின் பிரசவத்திற்க்காக தண்டல் (வட்டிக்கு) மூலம் வாங்கி வைதிருந்த ரூபாய்.9,000/- பணம் உள்பட ரூ.1 லட்சம்  மதிப்புள்ள பொருட்கள் சேதம்யடைந்துயுள்ளன. தற்போது உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

தீவிபத்திற்க்கான காரணம் இதுவரை காரணம் தெரியவில்லை பரங்கிப்பேட்டை பேலீசார் வழக்கு பதிந்து விசராணை செய்து வருகின்றனர்.

பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை


பரங்கிப்பேட்டை, நவ 26: சிதம்பரம் வண்டிகேட் -பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிதம்பரம் வண்டிகேட்- பு.முட்லூர் வரை புறவழிச்சாலையில் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


பஸ் போக்குவரத்து துவக்கப்படாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சி.முட்லூரில் அரசு கல்லூரி, ராகேவேந்திரா கல்லூரி, மோட்டார் வாகன அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளது. பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம், கடலூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் அதிகளவில் இங்கு படித்து வருகின்றனர். 

கும்மத்பள்ளி புதுப்பிக்கும் பணி - குழு அமைப்பு


ஜாமிஆ மஸ்ஜித் புதுப்பள்ளியை விரிவாக்கம்  புதுப்பிக்கும் பணி தொடர்பாகஆலோசனைக்கூட்டம் இன்று காலை  பத்து மணி அளவில் முத்தவல்லி, H. J.பஷீர் அஹமது தலைமையில் நடைப்பெற்றதுபரங்கிப்பேட்டை பேரூராட்சிமன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ்இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தலைவர் டாக்டர் S. நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றஇக்கூட்டத்தில் ஜமாஅத் நிர்வாகிகள்,  அனைத்து பள்ளி நிர்வாகிகள்ஊர்பொதுமக்கள் கலந்துக்கொண்டார்கள்சுமார் 45 நிமிடம் நடைபெற்றஇக்கூட்டத்தில்  பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை புதுப்பள்ளியின்வளர்ச்சிக்காக வழங்கினார்கள்
 இக்கூட்டத்தில் பள்ளி கட்டுமானப்பணிக்காக  எட்டு பேர் கொண்ட கமிட்டிஅமைக்கப்பட்டது.

Tuesday, November 20, 2012

பரங்கிப்பேட்டையில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் கனகசபை சாவு

பரங்கிப்பேட்டையில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு: 2 பேர் உயிர் தப்பினர்
பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர்கள் கனகசபை (வயது 48), முத்தையன் (50), கண்ணன் (31), மீனவர்கள். நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும் முத்தையனின் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலுக்குள் சென்றபோது ராட்சத அலை எழுந்தது.
இதனால் கடலில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 3 மீனவர்களும் நீரில் மூழ்கினர். உடனே முத்தையனும், கண்ணனும் நீச்சலடித்து கரையை அடைந்தனர். நீண்டதூரம் நீந்தியதால் கரையிலேயே மயங்கி விழுந்து விட்டனர்.
2 பேரையும் அந்த பகுதி மீனவர்கள் மீட்டனர். கனகசபையின் கதி தெரியாமல் அவரது குடும்பத்தினரும், பிற மீனவர்களும் கலங்கினார்கள். கடலில் மூழ்கி இறந்த கனகசபையின் உடல் இன்று அதிகாலையில் கரை ஒதுங்கியது. அவரது உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
பரங்கிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கனகசபை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிமுல்லா ஷா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.                                              
நன்றி : my pno

Tuesday, November 13, 2012

முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டி: பரங்கிப்பேட்டை ”BMD” அணி வெற்றி!


கடலூர், நவ, 13:கடலூரில் ”தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான” ”கடலூர் மாவட்ட அளவிலான  பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி” கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த  11-ம் தேதி நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் பரங்கிப்பேட்டை "BMD" அணியினரும் கலந்து கொண்டு விளையாடி முதல் பரிசை ரூபாய்.10,000/-   தட்டி வந்துயிருகின்றனர்.

மேலும்இந்த தகுதி போட்டியில் சிறப்பாக விளையாடும் 7 பேரைத் தேர்வு செய்து மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள அழைத்து செல்லப்படுவர் என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த வெற்றியானது கடந்த 15-ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு பெற்ற வெற்றி என்பதால் மிகுந்த மகழிச்சியில் உள்ளனர் "BMD" அணியினர்.
பூப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சிறப்புமிக்கது பரங்கிப்பேட்டை என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர் "பரங்கிப்பேட்டை BMD" அணியினர்.




படங்கள்: சல்மான் குர்ஷித்

Saturday, November 10, 2012

பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறை விழிப்புணர்வு ஊர்வலம்!


பரங்கிப்பேட்டை: விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தீபாவளி பண்டிகை தீ விபத்தில்லா பண்டிகையாக இருக்க கடைபிடிக்க வேண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதற்காக பரங்கிப்பேட்டையின் முக்கிய தெருக்களில் தீயணைப்பு வண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்றது. இது குறித்து தீயணைப்புத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரியவர்களின் மேற்பார்வையில் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.காலை 6 மணி முதல் இரவு 10 மணி முடிய பட்டாசுகளை வெடிக்கலாம்.

கலெக்டர் முன்பு பரங்கிப்பேட்டை பேரூராட்சி டெங்கி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!


பரங்கிப்பேட்டை: டெங்கி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பரங்கிப்பேட்டைபேரூராட்சி மன்ற வளாகத்ததில் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்பு கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ பங்கேற்று விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு உற்பத்திக்கு சாதகமான அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் நீர் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Sunday, November 4, 2012

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர்களாக

அஸ்ஸலாமு அலைக்கும்  !

பேரன்புமிக்க பரங்கிப்பேட்டை சகோதரர்களுக்கு  ஜனாப் .கேப்டன் 

M.ஹமீது அப்துல் காதர் அவர்களையும் , ஜனாப் . H.லியாகத் அலி 

அவர்களையும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர்களாக 

நியமனம் செய்திருக்கிறேன் என்பதை அன்போடு 

தெரிவித்துக்கொள்கிறேன் .

ஸலாம் !

தலைவர், டாக்டர் .S. நூர் முஹம்மது  சார்பாக 

Monday, October 29, 2012

பரங்கிப்பேட்டை வத்தக்கரையில் மீன்பிடி இறங்கு தளம்


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வத்தக்கரையில் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் கட்டும் பணிக்காக வெள்ளாற்றில் டிரஜ்ஜர் இயந்திரம் மூலம் தூர் வாரும் பணிகள் ஜருராக நடந்து வருகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராம மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையை சுற்றியுள்ள கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், புதுப்பேட்டை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை முகத்து வாரம் வழியாக படகில் கடலுக்குச் சென்று பிடித்து வருகின்றனர்.அகிலா, சூரை, சுங்கான், வஞ்சிரம், மத்தி உள்ளிட்ட மீன் வகைகள் தினமும் 100 டன் அளவிற்கு கேரளா, கர்நாடகா, கோவா மாநி லங்களுக்கு 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் தினமும் எடுத்துச் செல்லப்படுகிறது. கடலில் இருந்து படகுகள் மூலம் கொண்டு வரும் மீன் வகைகள் மண் தரையில் சுகாதாரமற்ற நிலையில் பேக்கிங் செய்து எடுத்துச் செல்வதால் கேரளா மாநிலம் கொச்சினில் அதிக விலைக்கு எடுப்பதில்லை. மீனவர்களுக்கு போதுமான லாபம் கிடைப்பதில்லை.  
 

Sunday, October 28, 2012

TNTJ ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பெரிய ஆசரகான தெருவில் நடைப்பெற்றது.


பரங்கிப்பேட்டை, அக் 27: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பெரிய ஆசரகான தெருவில்  நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் தன்னுடைய உரையில் இபுராஹிம் நபி (அலை) செய்த தியாங்களை பற்றி பேசினார்.

இதில் ஆண்கள். பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட ஏராளமனேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!



















நன்றி :tntjpno

Saturday, October 27, 2012

பரங்கிப்பேட்டை தியாகத் திருநாள் தொழுகை (படங்கள்)



பரங்கிப்பேட்டை: தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை (ஹிஜ்ரி 1433)  ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். வழக்கம் போன்று, பெண்களுக்கான தொழுகை ஏற்பாடு மினி ஷாதி மஹாலில் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் திரளாக வந்து தொழுகையில் பங்கு கொண்டனர். 
அதேபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகை பெரிய ஆசரகாணா தெருவில் உள்ள ஒரு திடலில் நடைபெற்றது. இதிலும் பெண்கள் தொழுகைக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இத்திடல் தொழுகையில் தமிழில் குத்பா உரை நிகழ்த்தப்பட்டது.

 
நன்றி : mypno