பரங்கிப்பேட்டை, நவ 26: சிதம்பரம் வண்டிகேட் -பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிதம்பரம் வண்டிகேட்- பு.முட்லூர் வரை புறவழிச்சாலையில் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் போக்குவரத்து துவக்கப்படாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சி.முட்லூரில் அரசு கல்லூரி, ராகேவேந்திரா கல்லூரி, மோட்டார் வாகன அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளது. பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம், கடலூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் அதிகளவில் இங்கு படித்து வருகின்றனர்.
சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு பஸ், மினி பஸ் இயக்கப்படுகிறது.பு.முட்லூரில் இருந்து சி.முட்லூர் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தினமும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பு.முட்லூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர்.
எனவே புறவழிச்சாலையில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கலெக்டருக்கு கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
thanks ;tntjpno
No comments:
Post a Comment