
மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த ஜவுளி ஆலை கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பங்களாதேஷிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments:
Post a Comment