
அப்போது அந்த தொழிற்சாலையில் இருந்த மற்றொரு கொதிகலனும் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த ரசாயன புகை காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதில் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment