click me

Wednesday, November 28, 2012

ஷேவாக் 100 தங்க நாணயங்களை பரிசாக பெறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர ஷேவாக் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2வது போட்டியில் விளையாடியதன் மூலம் ஷேவாக் இந்த சாதனையை எட்டினார்.
இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 100 தங்க நாணயங்களை வழங்க டெல்லி கிரிக்கெட் சங்கம் இன்று முடிவு செய்துள்ளது.
வரும் ஜனவரி 6ம் திகதி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியின்போது, ஷேவாக்கிற்கு அந்த தங்க நாணயங்கள் வழங்கப்படும்.
மேலும், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வாயில் அல்லது கேலரிக்கு ஷேவாக் பெயரை வைக்கவும் கிரிக்கெட் சங்க தலைவர் சேட்டன் சவுகான் முன்மொழிந்துள்ளார்.

No comments:

Post a Comment