click me

Wednesday, November 21, 2012

மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கேரி பேக்குகளை அப்புறப்படுத்தினர்.


டெங்கி நோய் ஒழிப்பு பணியில் தீவிர முனைப்புடன் பணியாற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அவ்வப்போது சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அவ்வாறே கடலூர் மாவட்டத்தை "மக்கும்  தன்மையற்ற நெகிழி பயன்படுத்தாத மாவட்டமாக மாற்றுவதிலும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றார். 
அந்த வகையில், சிதம்பரம் நகரில் வர்த்தக நிறுவனங்களில்  கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னு செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்று சிதம்பரம் வழியாக கடலூர் திரும்பினார். அப்போது சிதம்பரம் மேலரதவீதியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கி தனியாருக்கு சொந்தமான பாத்திரக்கடைக்குள் நுழைந்தார். அங்கு வைத்திருந்த கேரி பேக்குகளை பறிமுதல் செய்தார். பின்னர் அதே கடையில் மாடிக்கு சென்று குடிநீர் தேக்கத் தொட்டி அசுத்தமாக இருப்பதை பார்வையிட்டு, அதனை சுத்தம் செய்யுமாறு கடை உரிமையாளரிடம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார். பின்னர் வெற்றிலைக்கடை மற்றும் பூக்கடை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு கேரி பேக்குகளை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தார். பின்னர் ஆட்சியர் காரில் ஏறி கடலூர் புறப்பட்டு சென்றார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கேரி பேக்குகளை அவர்களே அப்புறப்படுத்தினர். ஆய்வின் போது உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.தனசிங், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி :mypno படம்: ஜி.சுந்தரராஜன்

No comments:

Post a Comment