click me

Tuesday, November 6, 2012

1 லட்சம் முட்டை உடைந்து ரோட்டில் ஆறாக ஓடியது பனிமூட்டத்தால் லாரி விபத்து

பனிமூட்டத்தால் லாரி விபத்து: 1 லட்சம் முட்டை உடைந்து ரோட்டில் ஆறாக ஓடியது
உளுந்தூர்பேட்டை, நவ. 6- 

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). முட்டை வியாபாரி. இவர் நேற்று நாமக்கல் சென்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் முட்டைகளை கொள்முதல் செய்து மினி லாரியில் ஏற்றி வந்தார். லாரியை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த டிரைவர் கண்ணன் (28) ஓட்டி வந்தார். 

இந்த லாரி இன்று அதிகாலை 3 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளையனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலையில் சரியாக தெரியவில்லை. அந்த நேரத்தில் கார் ஒன்று லாரியை முந்தி செல்ல முயன்றனது. இதற்காக டிரைவர் லாரியை இடது பக்கமாக திருப்பினார். 


அப்போது அங்கு டிரெய்லர் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. பனி மூட்டத்தால் டிரெய்லர் லாரி நிற்பது தெரியவில்லை. அதில் மினி லாரி மோதியது. இதனால் லாரியில் இருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் முட்டைகள் உடைந்து சிதறின. அவை ரோட்டில் ஆறாக ஓடியது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் முட்டை கூழ்களை பாத்திரங்களில் எடுத்து சென்றனர். 

இந்த விபத்தில் டிரைவர் கண்ணன், நந்தகுமார் இருவரும் லேசான காயம் அடைந்தனர். உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment