
அயர்லாந்து நாட்டிலிருந்து ஜேர்மனியின் பிராங்கபர்ட் நோக்கி 262 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென சக விமானிக்கு தலைவலி ஏற்பட்டு, தனது பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
உடனே விமான ஊழியர்கள் பயணிகளிடம் இங்கு மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? என கேட்டனர். ஆனால் மருத்துவர்கள் யாரும் இல்லை.
அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவை சேர்ந்த விமானி ஒருவர் இந்த விமானத்தில் பயணித்தார். அவர் அனைத்து விமானங்களையும் ஓட்டும் தேர்ச்சி பெற்றவர் என்றது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பயணி, டப்ளின் நகரில் விமானத்தை தரையிறக்கினார். அங்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விமானம், பிராங்கபர்ட் நோக்கி புறப்பட்டது.


No comments:
Post a Comment