
நைஜீரியாவில் பருவ மழை கடந்த ஜூலை மாதம் தொடங்கி அக்டோபரில் முடிகிறது. சமீபத்தில் பெய்த பலத்த மழையில் அடமாவா, கோகி ஆகிய மாநிலங்கள் பலத்த சேதம் அடைந்தன.
இங்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மழை, வெள்ளத்தால் படுகாயம் அடைந்துள்ளனர். இப்போது மழைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுவரையிலும் வெள்ளத்திற்கு 363 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இத்தகவலை நைஜீரிய தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சி நேற்று வெளியிட்டது.





No comments:
Post a Comment